Sunday, December 18, 2016

வார ராசிப்பலன் டிசம்பர் 18 முதல் 24 வரை 2016


வார ராசிப்பலன்   டிசம்பர்  18  முதல்  24 வரை   2016
மார்கழி  3 முதல்  9 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


சந்தி


கேது  செவ்
               
திருக்கணித கிரக நிலை




சுக்கி  
ராகு
புதன்
சூரிய
சனி 

               
குரு 


கிரக   மாற்றம்

19&12&2016 புதன் வக்ர ஆரம்பம்

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கடகம்  16.12.2016 காலை 08.51 மணி முதல் 18.12.2016 மதியம் 12.41 மணி வரை.
சிம்மம்  18.12.2016 மதியம் 12.41 மணி முதல் 20.12.2016 இரவு 08.41 மணி வரை.
கன்னி  20.12.2016 இரவு 08.41 மணி முதல் 23.12.2016 காலை 08.06 மணி வரை.
துலாம்  23.12.2016 காலை 08.06 மணி முதல் 25.12.2016 இரவு 08.52 மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்   அசுவனிபரணிகிருத்திகை 1ம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள்நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்டமேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10ல் சுக்கிரன் 11ல்செவ்வாய்கேது சஞ்சாரம் செய்வதால் எதிலும் அனுகூலமானப்பலனைப் பெற்று விடுவீர்கள்உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்கணவன்மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைகுறையாதுஉற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்துகொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடையலாம்சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும்பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம்குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்அசையும் அசையா சொத்துக்களால்வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லதுதொழில் வியாபாரத்திலும் போட்டிகள் விலகி புதியவாய்ப்புகள் கிடைக்கப் பெறும்கூட்டாளிகளிடமும்தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால்அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்உத்தியோகஸ்தர்களுக்குவேலைபளு அதிகமாக இருந்தாலும் உயரதிகாரிகளின் ஊக்குவிப்புகள்உற்சாகத்தை அளிக்கும்.  மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படகூடிய ஆற்றலைப் பெறுவார்கள்.  சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -   21,22,23,24.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணிமிருகசீரிஷம் 1,2ம்பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷபராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் சஞ்சரிப்பதால்உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றும் என்றாலும் 5ல் குரு 10ல்செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும்கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்அனுகூலப்பலன் உண்டாகும்பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்குஆதாயங்களைப் பெறுவீர்கள்பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால்குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விடமுடியும்பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்திநல்ல லாபத்தை பெறுவீர்கள்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குநல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்றசெயல்பாடுகளால் லாபம் குறையும்தொழிலாளர்களும் தேவையற்றபிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள்உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குபணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின்ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும்மாணவர்களுக்கு கல்வியில் சற்றுமந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்துவிடுவீர்கள்விளையாடும் போது கவனமுடன் இருப்பது உத்தமம்சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -   18,23,24.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள்திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம்பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலைஇசைத்துறைகளிலும் சிறந்துவிளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம்ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சனி, 7ல் புதன் சஞ்சாரம் செய்வதால்எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும்உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடபணிகளில் சுறுசுறுப்புன் செயல்படுவீர்கள். 4ல் குரு சஞ்சரிப்பதால்தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்பணவரவுகளில்ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் நாள்தோறும் உள்ள தேவைகளைபூர்த்தி செய்து விட முடியும்திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள்மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லதுகுடும்பத்தில் ஒற்றுமைசிறப்பாக இருக்கும்முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடுசெய்யாதிருப்பது உத்தமம்உற்றார் உறவினர்களின் வருகைமகிழ்ச்சியளிக்கும்ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்வெளிவட்டாரத் தொடர்புகள்விரிவடையும்தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும்லாபங்களை தடையின்றிப் பெற முடியும்உத்தியோகஸ்தர்களுக்கும்பணியில் நிம்மதியான நிலை இருக்கும்கொடுக்கல் வாங்கலில் சற்றுசிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும்குருபகவானுக்குபரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -    18,19,20.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம்பூசம்ஆயில்யம்
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதையாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசிநேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன் 7ல் சுக்கிரன் சஞ்சாரம்செய்வதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். 2ல்ராகு 8ல் கேது சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையேதேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும்பேச்சில் நிதானத்தைக்கடைப்பிடிப்பது நல்லதுஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாதுஉற்றார் உறவினர்களைஅனுசரித்துச் நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஒரு சிலஅனுகூலங்களை அடைய முடியும்திருமண சுபகாரியங்களுக்கானமுயற்சிகளில் தடைகள் ஏற்படும்பண விஷயத்தில் பிறரை நம்பி பெரியதொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லதுதொழில்வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ளநேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும்எடுக்கும்எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப்பெற முடியும்உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்றுக் கூடுதலாகஇருக்கும்உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும்சமாளித்து விடுவீர்கள்தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால்அலைச்சல்கள் குறையும்முருகப் பெருமானை வழிபாடு செய்வதுநல்லது.


வெற்றிதரும் நாட்கள் -   18,21,22.

சிம்மம் மகம்பூரம்உத்திரம்ம் பாதம்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல்கொண்டவராகவும்கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவதுகாப்பாற்றும் சுபாவம் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களேஜென்ம ராசிக்கு 2ல் குரு, 5ல் புதன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில்மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்கணவன் மனைவிடையேஒற்றுமை சிறப்பாக இருக்கும்.  உற்றார் உறவினர்களின் ஆதரவுகள்மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறுபாதிப்புகள் தோன்றி மறையும்தேவையற்ற பயணங்களால் சற்றேஅலைச்சல்கள் அதிகரிக்க கூடும்நேரத்திற்கு உணவு உண்ண முடியாதசூழ்நிலைகளும் உண்டாகும்பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் ஆடம்பர பொருட்களைவாங்கும் வாய்ப்பும் அமையும்பூர்வீக சொத்துக்களால் ஒருசிலஆதாயங்கள் கிட்டும்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குகூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல பல வாய்ப்புகளும்கிடைக்கப் பெறும்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படசெயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்புதிய வேலைதேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும்தெய்வீகப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்கடன் சற்றே குறையும்மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -   18,19,20,23,24.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள்அஸ்தம்சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புபண்புமரியாதைதெய்வ பக்தி உடையவராகவும் சூது வாதுஅறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும்கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சனி, 5ல் சுக்கிரன், 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்வெற்றிகளைப் பெறுவதொடுஎந்த எதிர்ப்புகளையும் சமாளித்துமுன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்உடல் ஆரோக்கியத்தில்வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்கணவன்மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்பணவரவுகள் சிறப்பாகஇருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும்ஆடை ஆபரணங்கள்வாங்கும் வாய்ப்பு அமையும்திருமண சுபகாரிய முயற்சிகளில்தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும்உற்றார் உறவினர்களின் ஆதரவுமகிழ்ச்சியளிக்கும்கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில்ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம்கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும்தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும்திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிட்டும்தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால்அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும்கிடைக்கும் வாய்ப்புகளைநழுவ விடாமல் பாதுகாத்த கொள்வது நல்லதுமாணவர்கள் நல்லமதிப்பெண்களைப் பெறுவார்கள்தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதுநல்லது.

வெற்றிதரும் நாட்கள் -   18,21,22.

துலாம் சித்திரை3,4, சுவாதிவிசாகம்1,2,3ம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க தயங்காதபரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே இந்தவாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 4ல் சுக்கிரன், 5ல் செவ்வாய்சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகஇருக்கும்எடுக்கும் முயற்சிகளிலும் தடையின்றி வெற்றி கிட்டும்கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம்என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்ஆடம்பரசெலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதைதவிர்க்கலாம்உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாகஇருப்பார்கள்பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரியதொகைகளை கடனாக கொடுப்பதால் தேவையற்ற பிரச்சனைகளைசந்திக்க நேரிடும்உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும்உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும்புதிய வேலைதேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லதுதொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெறமுடியும்வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம்அமையும்மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால்எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்ஆஞ்சநேயரைவழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -   18,19,20,23,24.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம்அனுஷம்கேட்டை
எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதைபிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே ஜென்மராசிக்கு 11ல் குரு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும், 2ல்சூரியன், 4ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால்கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைவீண்வாக்குவாதங்கள் உண்டாகும்குடும்பத்திலுள்ள அனைவரையும்அனுசரித்துச் செல்வது நல்லதுபொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.  தடைபட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போதுமேற்கொள்ளலாம்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டியவாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும்சிறப்பான லாபங்களும் கிட்டும்தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்என்பதால் முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லதுஉத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்துபணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும்எதிர்பார்க்கும்உயர்வுகள் கிடைக்கும்ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடுஅதிகரிக்கும்உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும்உடனே சரியாகிவிடும்புதிய பொருட்கள் வாங்கும் விஷயங்களில் சற்றுநிதானித்துச் செயல்படுவது நல்லதுகொடுக்கல் வாங்கல் சரளமாகநடைபெறும்மாணவர்கள் கல்விக்காக சுற்றுலா தளங்களுக்கு செல்லும்வாய்ப்பினை பெறுவார்கள்சிவபெருமானை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் -   18,19,20,21,22.

தனுசு  மூலம்பூராடம்உத்திராடம் 1ம் பாதம்
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளைபூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல்கொண்ட தனுசு  ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதுசாதகமற்ற அமைப்பு என்றாலும், 3ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால்எடுக்கும் முயற்சிகளில் தடைகளை தாண்டி வெற்றியினைப் பெறுவீர்கள்உடல் நிலையில் கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில்கட்டுபாட்டுடன் இருப்பது நல்லதுகணவன் மனைவியிடையே சிறுசிறுஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும்முன் கோபத்தை குறைப்பதுமுடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம்குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையிருக்கும்பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்மங்களரமான சுபகாரியங்கள் கைகூடுவதில் சற்று தாமத நிலை ஏற்படும்.  உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமானபலனை அடையலாம்கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்துசெயல்படுவது நல்லதுகொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண்பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்செய்யும் தொழில் வியாபாரத்தில்போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடையமுடியும்சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது.  மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -   21,22,23,24.
சந்திராஷ்டமம்      16.12.2016 காலை 08.51 மணி முதல் 18.12.2016 மதியம் 12.41 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள்திருவோணம்அவிட்டம்1,2ம்பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும்நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்றவெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களேஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய் 12ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில்தேவையற்ற பிரச்சனைகளையும்உடல் ஆரோக்கியத்தில்பாதிப்புகளையும் உண்டாக்கும் என்றாலும், 9ல் குரு, 11ல் சனி சஞ்சாரம்செய்வதால் எதையும் சதாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும்உண்டாகும்பணம் பல வழிகளில் தேடி வரும்கணவன் மனைவி சற்றுவிட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமையும்சுபிட்சமும் நிறைந்திருக்கும்உறவினர்கள் சாதகமாகச்செயல்படுவார்கள்புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும்பூர்வீகச்சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்கொடுக்கல் வாங்கலில் பெரியமுதலீடுகளை ஈடுபடுத்தி லாபம்  காண முடியும்உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் தடையின்றிகிட்டும்வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியவிரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும்தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள்சிறப்பாக இருக்கும்புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால்அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும்மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்ற பள்ளி கல்லூரிக்கு பெருமைசேர்ப்பார்கள்ராகு கேதுவுக்கு சர்பசாந்தி செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -   23,24.
சந்திராஷ்டமம்  18.12.2016 மதியம் 12.41 மணி முதல் 20.12.2016 இரவு 08.41 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம்பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும்சிறு வயதிலிருந்தே சிறந்ததெய்வ பக்தியும்நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களேஇந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன் புதன் சஞ்சாரம்செய்வதால் எதிலும் லாபமான பலன்களைப் பெறுவீர்கள்பணவரவுகளில்ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள்கிடைக்கப்பெறும்கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக்கடைப்பிடிப்பதுமுன்கோபத்தை குறைப்பதுகுடும்பத்திலுள்ளவர்களைஅனுசரித்து நடப்பது நல்லதுஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாதுஅன்றடாட பணிகளில்திறம்பட செயல்பட முடியும்கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரியதொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண்விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்தொழில் வியாபார ரீதியாகமுன்னேற்றங்கள் உண்டாகும்எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும்கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதுநல்லதுவேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின்ஒத்துழைப்புகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள்மாணவர்களின் கல்வி திறன் உயரும்முருகப்பெருமானை வழிபாடுசெய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -   18,19,20.
சந்திராஷ்டமம்    20.12.2016 இரவு 08.41 மணி முதல் 23.12.2016 காலை 08.06 மணி வரை.


மீனம்  பூரட்டாதி 4ம் பாதம்உத்திரட்டாதிரேவதி
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும்அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே இந்த வாரம்ஜென்ம ராசிக்கு 7ல் குரு, 10ல் சூரியன்புதன் சஞ்சாரம் செய்வதால்குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும்கணவன்மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்சிலருக்கு வீடுவாகனம்போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும்உடல்ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச்செயல்படுவீர்கள்எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால்மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும்செய்யும் தொழில்வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள்மறைமுக எதிர்ப்புகள்யாவும் விலகி தொழில் மேன்மையடையும்கூட்டாளிகளிடையே இருந்தகருத்து வேறுபாடுகள் மறையும்விரோதிகளும் நண்பர்களாக மாறிநட்புகரம் நீட்டுவார்கள்வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவாய்ப்புகளால் நல்ல லாபத்தை பெறுவீர்கள்உத்தியோகஸ்தர்களுக்குபணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும்சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்றுகுடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோட விளையாட்டபோட்டிகளிலும் சிறந்து விளங்கி பாராட்டுகளையும் பரிசுகளையும்பெறுவார்கள்முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -    18,19,20,21,22.
சந்திராஷ்டமம்   23.12.2016 காலை 08.06 மணி முதல் 25.12.2016 இரவு 08.52 மணி வரை.

No comments:

Post a Comment