Monday, November 14, 2016

உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி

உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி

இந்த வார ஜோதிடம் 
இதழின் இலவச கேள்வி பதில் (14.11.2016)



இந்த வார ஜோதிடம் (புதிய வார இதழ்)
சந்தா விவரங்களுக்கு அணுகவும்
contact us : 044- 43993014, 8939882466
Mail id: nakkheeranmagazineweb@gmail.com, nakkheeransantha@gmail.com 
ஆசிரியர்: Dr Murugu Balamurugan PhD





கேள்வி.  நான் தற்போது தனியார் துறையில் பணி புரிகிறேன்வங்கி பணிக்கான முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்எப்பொழுது கிடைக்கும்நித்ய குமார்ஈரோடு

பதில்.  பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் பொருளாதார நிலை சிறப்பாக அமையவும்வங்கி பணிகொடுக்கல் வாங்கல் தொழில் போன்றவை சிறப்பாக இருக்கவும் தனக்காரகனான குரு பகவான் பலமாக இருக்க வேண்டும்மிதுன லக்னம்மிருக சீரிஷ நட்சத்திரம்மிதுன ராசியில் பிறந்துள்ள தங்களுக்கு ராசிலக்னத்திற்கு கேந்திராதிபதியான குரு 3ல் அமைந்து தற்போது குரு திசை  நடைபெறுகிறதுஇதனால் தங்களுக்கு வங்கி பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டுவரும் 25.04.2018ல் சனிபுக்தி முடிவடைந்து லக்ன ராசியாதிபதியான புதனின் புக்தி வரவுள்ளதுஇக்காலங்களில் வங்கி பணி கிடைக்கும். 3ல் அமைந்துள்ள குருவின் திசை என்பதால் பிறந்த ஊரை விட வெளியூர்வெளி மாநிலங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளே அதிகம்தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது


 கேள்வி. எனக்கு வெளிநாட்டில் பணி புரியும் வாய்ப்பு உள்ளதா-?  ராம் பிரசாத்உத்தம பாளையம்

பதில். பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 9, 12க்கு அதிபதிகள் பலம் பெற்று அதன் தசா புக்தி நடைபெறும் காலங்களில் வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் காணப்படும்கடக ராசி மீன லக்னத்தில் பூச நட்சத்திரத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 3ம் அதிபதி சுக்கிரன்  ஆட்சி பெற்று அமைந்து தற்போது சுக்கிர திசை நடைபெறுவதால் வெளியூர்வெளிமாநிலங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதுவெளிநாடு செல்லும் வாய்ப்பு  குறைவாக உள்ளதுஅதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்தி கொள்வது சிறப்புஅம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது


கேள்விஎன் மகளுக்கு  காதல் திருமணம் நடைபெறுமா அல்லது பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் நடைபெறுமா? Êசம்பத் குமார்விழுப்புரம்   

பதில்பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 5,7க்கு அதிபதிகளின் தொடர்பு இருந்தால் காதல் திருமணம் நடைபெறும்தனுசு ராசி கும்ப லக்னம்மூல நட்சத்திரத்தில் பிறந்துள்ள ஜாதகிக்கு களத்திர ஸ்தானாதிபதி சூரியன் ராகு சாரம்பெற்று சனி சேர்க்கையுடன் இருப்பதால் புது இடத்தில் அந்நியத்தில் திருமணம் நடைபெறும்ராசிக்கு 5ம் அதிபதி செவ்வாய் வக்ரம் பெற்றிருப்பதாலும்ராசிக்கு  5ல் கேது அமைந்திருப்பதாலும் ஜாதகிக்கு யாரையாவது விரும்ப கூடிய வாய்ப்பு உண்டாகும் என்றாலும் அதில் தடை ஏற்படும். 2017 செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கும் புதன் புக்தி காலத்தில் திருமணத்திற்கான முயற்சிகளை செய்வது நல்லதுபெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் நடைபெறும்தற்போது சனி புக்தி நடைபெறுவதால் ஜாதகி பெரியவர்களின் பேச்சை கேட்க மாட்டாள்குடும்பத்தாருடன் நிறை கருத்தவேறுபாடுகள் இருக்கும்சூரியன் ராகு சேர்க்கை பெற்றிருப்பதால் ஜாதகி தந்தையிடம் ஒத்து போக மாட்டாள்ஜாதகியின் தந்தை அவளின் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம்சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.


கேள்வி.  எனக்கு எப்போது அரசாங்க வேலை கிடைக்கும்மகாலட்சுமிசிதம்பரம்

பதில். பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் சூரியன்செவ்வாய்குரு போன்ற கிரகங்கள் 10ல் பலமாக இருந்தால் அரசுஅரசு சம்மந்தப்பட்டவற்றில் அனுகூலப்பலன்களை அடைய முடியும்மகர ராசி திருவோண நட்சத்திரம்மீன லக்னத்தில் பிறந்துள்ள தங்களுக்கு சூரியன் உச்சம் பெற்றுசெவ்வாய் ஆட்சிப் பெற்றிருப்பது சிறப்பு என்றாலும் 10ம் அதிபதியான குரு பாதக ஸ்தானமான 7ல் அமைந்து வக்ரம் பெற்றிருப்பதால் அரசு பணி கிடைப்பதற்காள வாய்ப்புகள் குறைவுஅப்படி கிடைக்கப் பெற்றாலும்நிரந்தரமற்ற தற்காலிக பணியே கிடைக்கும்தங்கள் உழைப்பிற்கான முழு அந்தஸ்தினைப் பெற முடியாமல் போகும்குரு வக்ரம் பெற்றிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் கவனமுடன் இருப்பது நல்லதுகுல தெய்வ வழிபாட்டினை தொடர்ந்து செய்து வருவது நல்லது



கேள்வி. எனக்கு தொழில் எவ்வாறு அமையும்.? பாஸ்கர் செல்வம் ஹரூர்

பதில். பொதுவாக ஒருவருக்கு தொழில் நன்றாக அமைய 10ம் இடங்கள் பலமாக அமைய வேண்டும்கேட்டை நட்சத்திரம்விருச்சிக ராசிவிருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 10ம் அதிபதி சூரியன் 2ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனைப் பெற்றுள்ளார்இது நல்ல அமைப்பு என்பதால் அரசுஅரசு சார்ந்த துறைகள் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்தற்போது 7ம் அதியான சுக்கிரனின் திசை நடைபெறுவதால் வண்டி வாகனங்கள்,  ஆடை ஆபரணங்கள் மூலம் சாதகப்பலன் அடையும் யோகம் உண்டுதற்போது 3வது திசையாக சுக்கிர திசை நடைபெறுவதால் எதிலும் தனித்து செயல்படாமல் யாரையாவது கூட்டாக சேர்த்து கொண்டு தொழில் செய்வது நல்ல லாபத்தை தரும்அம்மன் வழிபாடுகள் மேற்கொள்வது உத்தமம்.

கேள்விஎனக்கு திருமணம் நடக்க பரிகாரம் கூறவும்தாயுமான சாமிஉத்தம பாளையம்

பதில். ரேவதி நட்சத்திரம்மீன ராசிதுலா லக்னத்தில் பிறந்துள்ள தங்களுக்கு குடும்பகளத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் வக்ரம் பெற்றிருப்பதும், 3ம் அதிபதி குரு, 5ம் அதிபதி சனி வக்ரம் பெற்றிருப்பதும்சூரியன் ராகுவுக்கு மிக அருகில் அமைந்து அஸ்தங்க தோஷம் உண்டாகி இருப்பதும் கடுமையான தோஷம் ஆகும்திருமண வாழ்க்கைக்கு தகுதி குறைவான ஜாதக அமைப்பு என்ற சொல்லலாம்திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவுஅப்படியே நடந்தாலும் வாழ்க்கையில் நிறைய விட்டு கொடுத்து செல்ல வேண்டியிருக்கும்திருமண விஷயத்தில் மிகவும் நிதானமாக முடிவு எடுப்பதே சிறந்ததுதொடர்ந்து குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

கேள்விநான் மிகுந்த பண கஷ்டத்தில் உள்ளேன்இப்பிரச்சனை எப்போது தீரும்தவராஜ்சென்னை.

பதில்  பொதுவாக கடன்கள் இன்றி வாழ தனக்காரகன் குருவும்கடன்களுக்கு காரகனாகிய சனியும் பலமாக இருத்தல் வேண்டும்ரேவதி நட்சத்திரம் மீன ராசிசிம்ம லக்னத்தில் பிறந்துள்ள தங்களுக்கு தனக்காரகன் குருவும்கடன்களுக்கு காரகனாகிய சனியும் வக்ரம் பெற்று தன ஸ்தானமான 2ம் வீட்டிலேயே அமைந்திருப்பதால் கடன் பிரச்சனைகள் தொடர்ந்து உள்ளதுபொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 3வது திசை நடைபெற்றால் வாழ்வில் முன்னேற்றமடைய தடைகள் உண்டாகும். 15.02.2017 முதல் லக்னாதிபதியாகிய  சூரியனின் திசை தொடங்கும் போது பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகி கடன்கள் படிப்படியாக குறையும்என்றாலும் குரு வக்ரம் பெற்றிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் இருப்பது உத்தமம்தட்சிணாமூர்த்தியை தொடர்ந்து வழிபாடு செய்வது நல்லது


கேள்விஎனக்கு வெளி நாட்டில் பணிக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் தடை ஏற்படுகிறது இதற்கு காரணம் என்ன--? Êசக்திபால்ஈரோடு

பதில்ஜாதக ரீதியாக 9,12க்கு அதிபதிகளின் தொடர்பு இருந்தால் மட்டுமே வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்சிம்ம லக்னம்கன்னி ராசிஉத்திர   நட்சத்திரத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 9, 12க்கு அதிபதிகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது சிறப்புகால புருஷ தத்துவப்படி 9ம் வீடான தனுசுவில் ராகு அமைந்து தற்போது ராகுவின் திசை நடைபெறுவதால் கண்டிப்பாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டுசிம்ம லக்னத்தின் அதிபதி சூரியனுக்கு ராகு பகை என்பதால் சில தடைகள் நிலவி வருகிறதுஎன்றாலும் கூடிய விரைவில் வெளிநாடு செல்வீர்கள்தொடர்ந்து துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்


கேள்வி.  எனக்கு எப்போது அரசாங்க வேலை கிடைக்கும்பொன்னுசாமிகொடுமுடி.



பதில்துலா லக்னம் பூராட நட்சத்திரத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 10ம் அதிபதி சந்திரன் 3ல் அமைந்து உள்ளார்இதனால் பிறந்த ஊரை விட வெளியூர்வெளி மாநிலங்களில் பணி புரியும் வாய்ப்பு உள்ளதுசந்திரன் குரு வீட்டில் அமைந்திருப்பதால் மக்களுக்கு சேவை செய்யும் விஷயங்களில் ஈடுபாடுஉணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட துறைநீர்சம்மந்தப்பட்ட துறைகளில் பணி புரிய கூடிய வாய்ப்பு உள்ளதுதற்போது லக்னத்திற்கு 6ல் அமைந்துள்ள செவ்வாயின் திசை 2022 ஜனவரி வரை நடைபெறவுள்ளதுஇதனால் அரசு பணி கிடைப்பதில் தடைகள் ஏற்படுகிறதுஅடுத்து ராகுவின் திசை வரும்அரசு சம்மந்தபட்டவற்றிற்கு காரகனான சூரியனுக்கும்துலா லக்னத்திற்கும் ராகு பகை என்பதால் அரசு பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதனியார் துறைகளில் பணி புரிவதற்கான வாய்ப்புபிறந்த ஊரை விட வெளியூர்வெளி மாநிலங்களில் வாய்ப்பே அதிகம் உள்ளது

No comments:

Post a Comment