Sunday, November 27, 2016

பிருகு-நந்தி நாடி கூறும் உறவு நிலைகள்

பிருகு-நந்தி நாடி கூறும் உறவு நிலைகள்

      சித்தயோகி சிவதாசன் ரவி
9444918645

----------------------------------------------
            பிருகு-நந்தி நாடி முறையில் எந்த ஒரு பலனையும் குழப்பமில்லாமல் எளிதில் கணிக்கலாம். கிரக காரகங்கள் கொண்டு பலன் கூறுவது மிகவும் சுலபம். ஒரு ஜாதகரின் உறவு நிலைகள் எப்படி இருக்கும் என்று பிருகு- நந்தி நாடி முறையில் காண்போம்.            
            குடும்பத்தில் யாராவது ஒருவர் மிகவும் பிடிவாதக்காரராகவும் ,யாருக்கும் வளைந்து கொடுக்காதவராகவும், யாரையும் தேடிச்செல்லாதவராகவும், எல்லோரும் தன்னை நாடி வரவேண்டும் என்று விரும்புபவராகவும் இருப்பதைக்காணலாம். இத்தகையவர்கள் தங்கள் இருப்பிடம் விட்டு வேறு இடத்திற்கு நகர மாட்டார்கள். பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள். ஊர் சுற்றுவதைக்கூட விரும்ப மாட்டார்கள். பிறரை சார்ந்து இருப்பதை விரும்பமாட்டார்கள். குடும்பத்தில் யார் அப்படி இருப்பார்கள் என்பதை ஜாதகத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
            ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் ஆட்சி வீட்டில் அமர்ந்திருக்கிறதோ , அந்த கிரகத்தால் குறிக்கப்படும் உறவினர் மேற்கூறியவாறு குணதிசயங்களை கொண்டிருப்பார்.
                   
மீனம்
குரு
மேசம்
செவ்வாய்
ரிசபம்
சுக்கிரன்
மிதுனம்
புதன்
கும்பம்
சனி
கிரக ஆட்சி வீடுகள்
கடகம்
சந்திரன்
மகரம்
சனி
சிம்மம்
சூரியன்
தனுசு
குரு
விருச்சிகம்
செவ்வாய்
துலாம்
சுக்கிரன்
கன்னி
புதன்

கிரகங்களும் உறவுகளும்:
சூரியன்- தந்தை, மூத்த மகன், மாமனார் (மனைவியின் தந்தை)
சந்திரன் – தாய், அக்கா, அண்ணி, மாமியார்(மனைவியின் தாய்)
செவ்வாய்- தம்பி, இளைய மைத்துனன், பெண்கள் ஜாதகத்தில் கணவன், மருமகன், சித்தப்பா
புதன்- தாய் மாமன், கடைசி தம்பி அல்லது கடைசி தங்கை, இரண்டாவது மனைவி
குரு- ஆண் ஜாதகத்தில் ஜாதகன், பெண் ஜாதகத்தில் இரண்டாவது கணவன்
சுக்கிரன்- ஆண் ஜாதகத்தில் மனைவி, பெண் ஜாதகத்தில் ஜாதகி, மகள், மருமகள், அத்தை,சித்தி, கொளுந்தியாள்,
சனி- அண்ணன், மச்சான், பெரியப்பா
ராகு- தந்தை வழி பித்ருக்கள் (உயிர் நீத்தவர்கள் மட்டும்)
கேது- தாய் வழி பித்ருக்கள் (உயிர் நீத்தவர்கள் மட்டும்)
1.    சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதகரின் தந்தை மிகவும் பிடிவாதக்காரராக இருப்பார் , அவர் யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டார். எல்லோரும் தன்னை நாடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
2.    சந்திரன் கடகத்தில் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதரின் தாய் மிகவும் பிடிவாதக்காரராக இருப்பார் , அவர் யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டார். எல்லோரும் தன்னை நாடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
3.    செவ்வாய் மேசம் அல்லது விருச்சிகத்தில் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதகரின் தம்பி மிகவும் பிடிவாதக்காரராக இருப்பார் , அவர் யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டார். எல்லோரும் தன்னை நாடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
4.    புதன் மிதுனம் அல்லது கன்னியில் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதகரின் தாய் மாமன் மிகவும் பிடிவாதக்காரராக இருப்பார் , அவர் யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டார். எல்லோரும் தன்னை நாடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
5.    குரு தனுசு அல்லது மீனத்தில் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதகர் மிகவும் பிடிவாதக்காரராக இருப்பார் , அவர் யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டார். எல்லோரும் தன்னை நாடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
6.    சுக்கிரன் ரிசபம் அல்லது துலாத்தில் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதகரின் மனைவி மிகவும் பிடிவாதக்காரராக இருப்பார் , அவர் யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டார். எல்லோரும் தன்னை நாடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
7.    சனி மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதகரின் அண்ணன் மிகவும் பிடிவாதக்காரராக இருப்பார் , அவர் யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டார். எல்லோரும் தன்னை நாடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
ஜாதகத்தில் எந்த கிரகத்திற்கு முன்,பின் ராசிகளிலும் ,எதிர் ராசியிலும், அந்த கிரகம் நின்ற ராசியிலும் (1-7,2-12 ஆம் ராசிகள்) வேறு கிரகங்கள் இல்லையோ , அந்த கிரகத்தால் குறிக்கப்படும் உறவினர் கும்பத்திற்கு எந்த வித தொடர்பும் இல்லாமல் காலப்போக்கில் பிரிந்து சென்று விடுவார்  அல்லது  அந்த உறவினருக்கு மற்ற குடும்ப உறவுகளால் எந்த வித உதவியும் கிடைக்காமல் போகும். இந்த விதியில் சூரியனுக்கும், புதனுக்கும் சிறப்பு விதி உண்டு. அதன் படி சூரியன், புதன் நின்ற ராசியிலும் அவை நின்ற ராசிக்கு எதிர் ராசியிலும் (1-7) கிரகங்கள் இல்லை என்றால் மேற்கூறிய பலன்கள் நடக்கும் .

சுக்கிரனுக்கு
முன் ராசி
(12)
சுக்கிரன்
நின்ற ராசி
(1)
சுக்கிரனுக்கு
பின் ராசி
(2)


உதாரணம்







சுக்கிரனுக்கு
எதிர் ராசி
(7)


1.    ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசியிலும் , அதற்கு எதிர் ராசியிலும் (1-7) வேறு கிரகங்கள் இல்லாமல் இருந்தால் ஜாதகரின் தந்தைக்கு குடும்பத்தின் மீது பற்று இருக்காது. அவர் கும்பத்தை விட்டு பிரிந்து செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
2.    ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியிலும் , அதற்கு எதிர் ராசியிலும் , சந்திரன் நின்ற ராசிக்கு முன், பின் ராசிகளிலும் (1-7,2-12 ல்) வேறு கிரகங்கள் இல்லாமல் இருந்தால் ஜாதகரின் தாய்க்கு குடும்பத்தின் மீது பற்று இருக்காது. அவர் கும்பத்தை விட்டு பிரிந்து செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் அல்லது தாய் பிற குடும்ப உறுப்பிநர்களின் உதவியின்றி தனித்து நின்று கஷ்டங்களை அனுபவிப்பார்.
3.    ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசியிலும் , அதற்கு எதிர் ராசியிலும் , செவ்வாய் நின்ற ராசிக்கு முன், பின் ராசிகளிலும் (1-7,2-12 ல்) வேறு கிரகங்கள் இல்லாமல் இருந்தால் ஜாதகரின் தம்பி ஒருவருக்கு குடும்பத்தின் மீது பற்று இருக்காது. அவர் கும்பத்தை விட்டு பிரிந்து செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் அல்லது அந்த தம்பி மட்டும் பிற குடும்ப உறுப்பிநர்களின் உதவியின்றி தனித்து நின்று கஷ்டங்களை அனுபவிப்பார்.
4.    ஜாதகத்தில் புதன் நின்ற ராசியிலும் , அதற்கு எதிர் ராசியிலும் (1-7) வேறு கிரகங்கள் இல்லாமல் இருந்தால் ஜாதகரின் தாய் மாமனுக்கு குடும்பத்தின் மீது பற்று இருக்காது. அவர் கும்பத்தை விட்டு பிரிந்து செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
5.    ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசியிலும் , அதற்கு எதிர் ராசியிலும் , குரு நின்ற ராசிக்கு முன், பின் ராசிகளிலும் (1-7,2-12 ல்) வேறு கிரகங்கள் இல்லாமல் இருந்தால் ஜாதகருக்கு குடும்பத்தின் மீது பற்று இருக்காது. அவர் கும்பத்தை விட்டு பிரிந்து செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் அல்லது ஜாதகர் பிற குடும்ப உறுப்பிநர்களின் உதவியின்றி தனித்து நின்று கஷ்டங்களை அனுபவிப்பார்.
6.    பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசியிலும் , அதற்கு எதிர் ராசியிலும் , சுக்கிரன் நின்ற ராசிக்கு முன், பின் ராசிகளிலும் (1-7,2-12 ல்) வேறு கிரகங்கள் இல்லாமல் இருந்தால் ஜாதகரின் மனைவிக்கு குடும்பத்தின் மீது பற்று இருக்காது. அவர் கும்பத்தை விட்டு பிரிந்து செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் அல்லது மனைவி மட்டும் பிற குடும்ப உறுப்பிநர்களின் உதவியின்றி தனித்து நின்று கஷ்டங்களை அனுபவிப்பார்.
7.    ஜாதகத்தில் சனி நின்ற ராசியிலும் , அதற்கு எதிர் ராசியிலும் , சனி நின்ற ராசிக்கு முன், பின் ராசிகளிலும் (1-7,2-12 ல்) வேறு கிரகங்கள் இல்லாமல் இருந்தால் ஜாதகரின் அண்ணன் ஒருவருக்கு குடும்பத்தின் மீது பற்று இருக்காது. அவர் கும்பத்தை விட்டு பிரிந்து செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் அல்லது அந்த அண்ணன் மட்டும் பிற குடும்ப உறுப்பிநர்களின் உதவியின்றி தனித்து நின்று கஷ்டங்களை அனுபவிப்பார்.




1 comment:

  1. அய்யா என்னுடைய ஜாதகத்தில் சூரியனோடு சனி இருக்கிறார் முன் பின் கிரகங்கள் இருகிறது.அனால் எதிர்கிரகம் மட்டும் இல்லை..அனால் அப்பா என்னுடன் இல்லை

    ReplyDelete