Saturday, December 10, 2016

உடன் பிறப்புகளின் எண்ணிக்கையை அறிதல்:-

பிருகு-நந்தி நாடி முறையில் உடன் பிறப்புகளின் எண்ணிக்கையை அறிதல்:-

சித்தயோகி சிவதாசன் ரவி
21/7 Type-III Quarters 
HVF Estate, Avadi, 
Chennai-600054
9444918645
9043324121


ஜாதகருடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்பதை அஷ்டகவர்க பரல்களைக்கொண்டும், நவாம்சத்தைக்கொண்டும் கணக்கிடலாம் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.ஆனால் எப்படி கணக்கிடுவது என்பதற்கான விளக்கம் எந்த நூலிலும் காணப்படவில்லை.எனவே அது ஒரு ஆராய்ச்சிக்குரிய விசயமாகத்தான் இருந்து வருகிறது. மேலும் இது போன்ற கணக்கீடுகளை யாரும் பயன்படுத்தி வருவதாகத்தெரியவில்லை.அஷ்டகவர்கம்,நவாம்சம் இவைகளைக்கொண்டு இத்தகைய கணக்கீடுகளை செய்து பார்த்தாலும் அது சரியாக வருவதில்லை.

பிருகு-நந்தி நாடி முறையில் ஒரு வழிமுறை காணப்படுகிறது. அம்முறையில் கணக்கீடு செய்யும்போது உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கை  ஓரளவிற்கு சரியாக வருகிறது.அம்முறை எப்படி என்பதை பார்ப்போம்.

பிருகு-நந்தி நாடி முறையில்,ஆண்களுக்கு ஜீவக்காரகன் குரு எனவும்,பெண்களுக்கு ஜீவக்காரகன் சுக்கிரன் எனவும் கூறப்பட்டுள்ளது.எனவே ஆண் ஜாதகத்தில் ஜாதகனைக்குறிக்கும் கிரகம் குருவாகும். பெண் ஜாதகத்தில் ஜாதகியைக்குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும். பிருகு-நந்தி நாடி முறையில்,பொதுவாக ஜாதகரைக்குறிக்கும் கிரகத்தை ஜீவக்காரகன் எனக்குறிப்பிடுவது வழக்கம்.

பிருகு-நந்தி நாடி முறையில், ஜீவக்காரகன் பிறப்பு ஜாதகத்தில் நின்ற ராசிக்கு 1-7, 2-12ம் இடங்கள் சுற்றம் எனப்படுகிறது.எனவே ஜீவக்காரகன் பிறப்பு ஜாதகத்தில் நின்ற ராசிக்கு 1-7, 2-12ம் இடங்களில் எத்தனைக்கிரகங்கள் நிற்கின்றனவோ, அத்தனைபேர்  ஜாதகரின் உடன் பிறந்தவர்களாவர். இவ்வாறு கணக்கிடும்போது நீச்சம் பெற்ற கிரகங்களை நீக்கிவிடவேண்டும். சில சமயங்களில் உச்ச கிரகங்களை இரண்டு எண்ணிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக சுற்று வட்டாரம் என்றால் அது நாலா திசைகளையும் குறிக்கும்.அது போல் நான்கு திசைகளிலும் நிற்கும் கிரகங்களை ஜாதகரின் சுற்றம் என குறிப்பிடுகிறது பிருகு நந்தி நாடி நூல்.

12
வடக்கு
1
கிழக்கு
2
தெற்கு


சுற்றம்





7
மேற்கு


                                        
                                              (1)
                                          கிழக்கு
                                              



   (12) வடக்கு                                                            தெற்கு (2)



                                           மேற்கு
                                              (7)

மேற்கண்ட விதிகளை ஒரு  உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம்.உதாரண ஜாதகம் கீழே தரப்பட்டுள்ளது.



ராகு
சனி



ராசி
ஆண் ஜாதகம்
சூரியன்
சுக்கிரன்
புதன்
செவ்வாய்

குரு
சந்திரன்
லக்னம்


கேது

உதாரண ஜாதகத்தில் ஜீவக்காரகனான குரு சிம்மத்தில் அமர்ந்துள்ளார்.எனவே சிம்ம ராசிக்கு 1-7, 2-12 ம் இடங்களில் அமர்ந்துள்ள கிரகங்களின் எண்ணிக்கையைக்கணக்கிட வேண்டும்.

சிம்மத்தில் (1)சந்திரன்                                                    -1
சிம்ம ராசிக்கு 7ல் எந்த கிரகமும் இல்லை                      - 0
சிம்ம ராசிக்கு 2ல் கேது                                                  - 1
           சிம்ம ராசிக்கு 12ல் சூரியன்,சுக்கிரன்,புதன்,செவ்வாய்  - 4
                                                                                               --------
                                                                                மொத்தம்-   6
                                                                                              ---------
செவ்வாய் நீச்சம் ,எனவே ஒன்று நீக்கினால் (6-1= 5)வருவது 5 பேர். ஜாதகருடன் பிறந்தவர்கள் 5 பேராகும்.







1 comment:

  1. தாய் தந்தை உடன் பிறந்தவர்களை கண்டறிவது எப்படி?

    ReplyDelete