Sunday, December 4, 2016

உணவும் சோதிடமும்


மனிதன் உண்ணும் உணவைக் குறித்த பயன்மிகு நல்லப் பல தகவல்கள் சோதிட சாஸ்திரத்தில்; பரவலாகக் காணப்படுகிறது. முகூர்த்த சாஸ்திரத்தின் துவக்கமேக் குழந்தைகளுக்கு முதன் முதலாக அன்னமூட்ட எத்தகையக் காலம் சிறந்தது எனத் தெரிவிக்கும் அன்ன பிராஸன முகூர்த்தத்தில் ஆரம்பமாகிறது. அது எங்ஙனம் எனில் நட்சத்திரங்களை பொதுவாக சுப முகூர்த்தங்களுக்குத் தக்கவைத் தகாதவை என பிரிக்கும் போது, குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு அளிக்கத் தக்கவைத் தகாதவை எனப்பிரிக்கப்பட்டுள்ளது. வடமொழியில் இதனை பாலான்ன தாரங்கள், பாலான்ன இதர தாரங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. பாலான்ன தாரங்கள் என்னும் குழந்தைகள் முதல் முதலாக உணவருந்த தக்க நட்சத்திரங்கள் என்பவை ரோகினி மிருக சிரீடம், சதயம், புணர் பூசம் உத்திரம் முதல் அத்தம் சித்திரை, உத்திராடம் முதல் திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி முதல் ரேவதி, அஸ்வினி, சுவாதி, அனுஷம் என்னும் 16 நட்சத்திரங்களாகும். இவை தவிர மற்றவை விலக்கப்பட்ட நட்சத்திரங்களாகும். இந்த 16 நட்சத்திரங்களில் மட்டுமே கிரக பிரவேசம் முதலிய சுப காரியங்கள் செய்ய முகூர்த்த சாஸ்திரம் வலியுறுத்தப்படுகிறது. இப்போது பகுத்தறிவு கேள்வி நம்முள் தோன்றி ஏன் இந்த நட்சத்திரங்களில் அல்லாமல் விலக்கப்பட்ட மற்ற நட்சத்திரங்களில் சுப காரியங்களை செய்தால் என்னவாம்? அதற்கு பதிலாக கற்ற சோதிட பண்டிதர்கள் என்ன பதிலளிப்பார்கள் என்றால்?. இவ்வாறு விலக்கப்பட்ட நட்சத்திரங்களில் முகூர்த்தம் எடுதடதால் எவருக்காக முகூர்த்தம் எடுக்கப்படுகிறதோ அவருக்கு உண்ணும் உணவால் தீங்கு நேரும். ஏன் இவ்விதம் முகூர்த்த சாஸ்திரத்தில் விலக்கப்பட்ட நட்சத்திரங்களில் முகூர்த்தம் எடுத்தால் உணவால் மரணம் கூட ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு என்ன சாஸ்திர ஆதாரம் என்றால் முகூர்த்த சாஸ்திரத்தை பிரசன்ன சாஸ்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தான் அதனை உணர முடிகிறது. பிரசன்ன சாஸ்திரம் கூறுகிறது பிரசன்னம் கேட்க வரும் நபர் இவ்வாறு குழந்தைகளுக்கு உணவூட்ட ஆகாத நாட்களில் வந்தார் என்றால் அவருக்கு உண்ணும் உணவால் வியாதி உள்ளது எனக் கூற வேண்டுமாம் எனில் இங்ஙனம் உணவு உண்ண ஆகாத நட்சத்திரங்களில்முகூர்த்தம் எடுத்தால் முகூர்த்தம் எவருக்காக எடுக்கப்படுகிறதோ அவருக்கு உணவால் தீங்கு நேரும் என்பதும் அது பரம்பரையாக தொடரலாம் எனவும் நாம் உணர முடிகிறது. இத்தகைய சோதிட விதி அற்புதமாக மனிதனுக்கு நன்மையைத் தரும் பலன் ஒன்றை கூறுவதற்கு பலனாகிறது. அது என்னவென இனிக் காண்போம். 
ஒருவருக்கு உணவில் எதிரிகளால் கொடுக்கப்படும் ஸ்லோ பாய்சன், அல்லது வசிய மருந்து உள்ளதாஇ அல்லது ஒருவர் உண்ட உணவை விசமாகி அவரை பாதிக்கின்றதா என்பதனை மேற்;கூறிய விதிகளால் கண்டறிய முடியும்.
இன்றைய படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் வெளியில் உண்ணும் உணவுகள் விசமாகி உடல் தேய்ந்தும், மனம் ஒருநிலை அடையாமல்  கல்வியில் பின்தங்கி இருக்கும் நிலையைச் சோதிடத்தால் கண்டறிந்து சோதிடர்கள் கூறி வருகின்றனர். சில மாணவர்கள் திடீரென அதிக கோபம் உணவில், படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு உண்ணும் உணவு விசமாக மாறி உள்ளது என மேலோட்டமாக உணரலாம். இங்கே விசம் என்பது ஒன்றோடு ஒன்று பொருந்தாத உணவுகள், கெட்டு போனஉணவுகள் என்பவையாகும் எடுத்துக்காட்டாக ஒரு இளம் பெண் ஒருவருக்கு முகத்தில் திட்டு திட்டான அடையாளங்கள், மேலும் தலைமுடி எளிதாக உடைந்து கொட்டிக் கொண்டே இருந்தது. பிரச்னம் பார்த்ததில் அவர் உண்ணும் மீன் ஊறுகாயின் ஒவ்வாமையே இதற்கு காரணம் எனக் கண்டறிய முடிந்தது. இது போல வேறு ஒருவருக்கு மற்றொருவரால் வசிய மருந்து அளிக்கப்பட்டால் வசிய மருந்தை உண்ட நபர் உணவை வெறுத்து அதிக கோபமும் மண அமைதியும் அற்று காணப்படுவார். இத்தகைய வசிய மருந்து அல்லது உணவு விசம் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது என்பதனை அறிய சித்த மருத்துவ பாடல் கீழ் வருமாறுக் கூறுகிறது. 
கைவிசம் கொண்ட பேற்கு

கருதியக் குணத்தை கேளு

மெய்விலா பிடாரி நொந்து
மேவிய குளிரும் காய்ச்சல்

செய்ய மூச்சிரைப்பு இருமல்

சோர்ந்த தன்னம் விக்கலுண்டாம்

இத்தகை வசிய மருந்து அல்லது விச உணவை உண்டவர்கள் உடல் எல்லாம் வலிக்க குளிர் காய்ச்சல் அடிக்கடி ஏற்பட மூச்சிரைப்பு , தீராத இருமல் உண்ணும் போது விக்கல் ஏற்படும் எனவும் சித்த மருந்து நூல்கள் கூறுகின்றன. ஆனால் சோதிடமோ பிரச்னம் பார்க்கும் வேளையில் ஆரூடம் அல்லது சிந்திக்கப்படும் உதய லக்கினத்திற்கு நான்கு, ஏழு, எட்டில் இராகு அல்லது மாந்தி என்னும் குளிகன் இருந்தால் அவருக்கு இவ்விதமாக உணவில் சென்றுள்ள விசம் அல்லது வசிய மருந்து உள்ளது என அறியலாம். மேலும் மலையாள பிரச்ன நூல் ஜோதிட தீபமாலை என்னும் நூல் கூறுகிறது. ஒருவருக்கு ஆரூடம் பார்க்கும் வேளை ஆரூட இராசிக்கு மூன்றில் பாவக்கிரகமும் கண்டகம் என்னும் கேந்திரத்தில் குளிகனும், பஞ்சமம் என்னும் ஐந்தில் அர்க்க சுதன் என்னும் சனிபகவானும் இருக்க பிரச்னம் கேட்கும் நபருக்கு உணவில் விசம் கிடைத்துள்ளது என உணர்ந்துக் கொள்ள வேண்டும். இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒருவர் குழந்தைகளுக்கு உணவூட்ட ஆகாத நட்சத்திரங்கள் என்னும் முகூர்த்தத்திற்கு ஆகாத நட்சத்திரற்களில் பிரச்சனம் கேட்க வந்துள்ளார் அல்லது சாதகம் பார்;க்க வந்துள்ளார் என்றால் அவருக்கு உண்ணும் உணவில் பிரச்சனை உள்ளது என சோதிடம் முதல் தகவல் அறிவிக்கை நமக்கு தெரிவிக்கிறது. 
ஒருவருக்கு உணவில் விசம் அல்லது வசிய மருந்து ஏற்பட்டுள்ளது எனில் ஆயுர் வேத மருந்தாகிய மஹால் பஞ்ச கௌவ்யம் என்னும் மருந்தை காலை மாலை ஒரு டீஸ் பூண் மாமிச உணவுகளை தவிர்த்து ஒரு மண்டல காலம் உண்பது அல்லது, சிறந்த சித்த மருத்துவரை அனுகி மருந்து உட்கொள்வதுமே இவற்றின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
அது போலவே ஒருவர் எத்தகைய உணவில் விருப்பமுடையவர் என அவர் சாதகத்தினால் உணர நூல் விதிகள் உள்ளன. மேலும் பிரச்சனம் கேட்க வந்த நபர் எத்தகைய உணவு உண்டு வந்துள்ளார் என்பதனை போஜன பிரச்னம் என்னும் பகுதியால் ஒரு சோதிடத்தினால் கூற முடியும்.

வணக்கம்
பிரச்ன சோதிட வித்தகர்
அம்சி விவேகானந்தர்
11/6ப நெசவாளர் தெரு அம்சி
தேங்காப்பட்டணம் அஞ்சல்
குமரி மாவட்டம்
9443808596
9791367954 

No comments:

Post a Comment