Saturday, November 19, 2016

பிருகு-நந்தி நாடியில் கணவன்- மனைவி அமையும் தூரம்


சித்தயோகி சிவதாசன் ரவி
21/7 Type-III Quarters 
HVF Estate, Avadi, 
Chennai-600054
9444918645
9043324121


ஒரு ஜாதகருக்கு வரப்போகும் மனைவி அல்லது கணவனின் பிறந்த வீடு ஜாதகர் பிறந்த இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கும் என்பதை எளிதில் கணிக்கலாம். இவ்வளவு தூரத்தில் இருப்பார் என்று கிலோ மீட்டர் கணக்கில் சொல்ல முடியாவிட்டாலும். தோராயமாக பக்கத்தில் இருப்பாரா? அல்லது தூரத்தில் இருப்பாரா என்பதை கணிக்கலாம்.
ஆண் ஜாதகத்தில் ஜாதகரைக்குறிக்கும் குருவுக்கும், ஜாதகரின் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும் இடப்பட்ட தூரத்தைக் கொண்டு மனைவி அமையும் இடம் பக்கமா? அல்லது தூரமா? என்பதை அறியலாம்.
1. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 1-2-3-11-12 ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.
           
2. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 5-7-9 ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும்.                        
இதே போல் பெண் ஜாதகத்தில் ஜாதகியைக்குறிக்கும் சுக்கிரனுக்கும், ஜாதகியின் கணவனைக்குறிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரத்தைக்கொண்டு கணவன் அமையும் இடம் பக்கமா? அல்லது தூரமா? என்பதை அறியலாம்.
1. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-2-3-11-12 ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.  
                
2. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 5-7-9 ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும்.
வீட்டோடு மாப்பிள்ளை யார்?
பொதுவாக திருமணத்திற்கு பின் பெண் தன் கணவன் வீட்டிற்கு செல்வதுதான் வழக்கம். ஆனால் இதற்கு மாறாக ஒரு சிலர் வாழ்க்கையில் ஆணானவன் பெண் வீட்டிற்கு வீட்டோடு மாப்பிள்ளையாக செல்வதை காண முடிகிறது. அத்தகையவர்களின் ஜாதக நிலை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
1. ஆண் ஜாதகத்தில் குருவும் , சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் நிச்சயம் ஜாதகன் வீட்டோடு மாப்பிள்ளையாய் மனைவி வீட்டில் தங்கிவிடுவான். 
2. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் குரு தனித்து இருந்தாலும் ஜாதகன் மனைவி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.
3. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகரின் மனைவி தன் தாய் விட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள். 
4.பெண் ஜாதகத்தில் செவ்வாயும் ,சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் ஜாதகியின் கணவன் வீட்டோடு மாப்பிள்ளையாய் ஜாதகி வீட்டில் தங்கிவிடுவான். 
5. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் செவ்வாய் தனித்து இருந்தாலும் ஜாதகியின் கணவன் ஜாதகி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.
6. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகி திருமணத்திற்கு பின்னும் தன் தாய் விட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.






No comments:

Post a Comment