Sunday, December 4, 2016

ஒருவர் வாழும் இடத்தை சாதகம் தெரிவிக்குமே!

                                                              பிரச்சன சோதிட வித்தகர்
  அம்சி விவேகானந்தர்
அலை பேசி:9443808556

மனிதர்கள் சிலர் நகரங்களில் வாழ்கின்றனர் சிலர் கிராமங்களிலயே வாழ்கின்றனர், சிலருக்கு புனிதத் தலங்களில்; வாழும் பாக்கியம் கிடைக்கிறது. இவை அனைத்திற்;கும் அவர்கள் ஜாதகங்களில் அமைந்திட்ட கிரக அமைப்புகளே காரணம் என சோதிட சாஸ்திர நூற்கள் கூறுகின்றன. சாதக பாரிச்சாதம் பதினொன்றாம்; அத்தியாயம் 21, 22, 23, 24-ம் பாடல்கள் இதற்கான கிரக அமைவின் தகவல்களை நமக்குத் தெரிவிக்கின்றது.

“லக்னாதிபஸ்ய வீயகே ததுச்ச மித்ரே ஸிஹிர்த்தும்கககே தே வா தத்ராசிகே வா யதி மித்ரகேடே தஸ்யஸ்திதிர் ஜன்ம வஸீந்தராயாம். 
1. லக்கின வீட்டோன் இருக்கும் இராசிக்கு பனிரெண்டாம் வீட்டில்,
2. லக்கின வீட்டோனின் உச்ச வீட்டில்
3. லக்கின வீட்டோனின் நண்பனின் வீட்டில்

இந்த மூன்று வீடுகளில் ஏதேனும் ஒன்றில் லக்கின வீட்டோனின் நட்பு கிரகம் நிற்கவோ அந்த வீட்டை பார்க்கவோ செய்தால் அல்லது உச்சத்தில் இருக்கும் நட்பு கிரகம் அல்லது லக்யுன வட்டோனின் நண்பனின் உச்ச வீட்டின் அத்பதியோ லக்கின வீட்டில் இருக்கவோ அந்த வீட்டை பார்க்கவோ செய்தால்,
லக்கின வீட்டோனின் 12ம் வீட்டிலோ, லக்கின வீட்டோனின் உச்ச வீட்டிலோ, லக்கின வீட்டோனின் நண்பனின் வீட்டிலோ, லக்ன வீட்டோனின் நட்பு கிரகம் நிற்;கவோ, அந்த வீட்டை பார்க்கவோ செய்தால், அல்லது உச்சத்தில் நிற்கும் நட்பு கிரகம், அல்லது லக்கின வீட்டோனின் நண்பனின் உச்ச வீட்டின் அதிபதியோ இருக்கவோ பார்க்கவோ செய்தால் ஜாதகன் தனது சொந்த ஊரில் வாழ்பவனாவான். இந்த விதிக்கு முரணாக எவர் தன் ஊரில் வாழாமல் அயலூரில் வாழ்வார் என்றால் லக்கின வீட்டோனின் சத்துருக் கிரகம் நீசம் பெற்றோ வலுவின்றியோ லக்கின வீட்டோனிற்கு பனிரெண்டில் நின்றால், ஜாதகன் அயலூருக்குச் செல்வான் (தனது சொந்த ஊரை மறந்து விடுவான் எனப்பொருள்) அவ்வாறு லக்கின விட்டோனிற்கு பனிரெண்டில் இருக்கும் கிரகம் சுக்கிரனால் பார்க்கப்பட்டால் அயலூரின் தனியாக வாழ்வான். லக்கின வீட்டோன் அஸ்தங்கம் பெற்றால் ஜாதகர் குக்கிராமங்களில் சஞ்சரிப்பவராகவும், வலுப்பெற்றால் நகரங்;ளில் வாழ்பவருமாகும். லக்கின வீட்டோனின் பனிரெண்டாம் வீட்டோன் லக்கினத்திற்கு கேந்திர திரி கோணங்களில் நண்பனின் வீடு, சொந்த வீடு, உச்சவீடு இவற்றில் இருக்க அவன் இருபுறமும் சுபக்கிரகம் இருக்க சாதகர் அழகிய இடங்களில் சஞ்சரிபவனும், அந்த பனிரெண்டாம் வீட்டோனை சந்திரன்; சுக்கிரன், குரு பார்க்க புனித ஆலயங்கள் உள்ள பகுதியில் சஞ்சரிப்பவனும் ஆகும். ஆறாம் வீட்டிலோ, ஏழாம் வீட்டிலோ இவ்வண்ணம் இருக்க தனது சொந்த ஊரில் வாழ்பவனுமாகும். மேலும் பிரச்சனமார்க்க நூல் பிரச்சனம் கேட்கும் நபர் எங்கே வாழ்கின்றார் என்பதனை அறிய சாஸ்திர விதிகளைக் கூறுகிறது.

பிரசன்னத்தில் சிந்திக்கப்படும் ஆரூட அதிபதி சுபக்கிரகங்களின் இராசியில் இருக்க பிரச்சனம் கேட்கும் நபர் தற்போது மாளிகை மற்றும், ஆலயத்திற்கு அருகில் என மிகச்சிறந்த இடங்களில் வாழ்கின்றார் எனக்கூற வேண்டும். பாவக்கிரகங்களின் வீட்டில் இருக்க பிரச்சனம் கேட்பவர் கீழ்மக்கள் வாழும் பகுதியில் வாழ்கின்றார் எனவும் கூறவேண்டும். மேலும் ஆரூட அதிபதிக்கு சுபக்கிரகங்களின் சேற்;க்கை ஏற்பட்டால் நல்லோர்களின் சகவாசத்துடன் பிரச்சனம் கேட்பவர் உள்ளார் எனவும். பாவக்கிரகங்களின் சேர்க்கை ஏற்பட தீயவர்களின் சகவாசத்துடன் பிரச்சனம் கேட்பவர் இருக்கின்றார் எனக்கூறவேண்டும். இங்கேபாவகிரகங்களின் இராசியில் சுபக்கிரக யோகத்துடன் இருக்க மோசமான பகுதிகளில் நல்லோர் சகவாசத்தடன் உள்ளார் எனவும் சுபக்கிரக ராசியில் பாவக்கிரச்சேர்கையுடன் இருக்க நல்ல பகுதியில் தீயோர் சேர்கையுடன் உள்ளார்.

இவையாவும் காணமல் போன ஒருவரைக்குதித்து அல்லது ஒருவருக்கு பிரச்சனம் பார்கும் வேளை அவர் எங்கு உள்ளார் அல்லது ஐந்தாம் வீட்டோன் அமரும் இராசியால் அவருடன் இணைந்த கிரகங்களால் அவர் பிள்ளைகள் எத்தகைய இடத்தில் எவருடன் பழக்கத்தில் உள்ளார் என்பதனை அறிய பயனள்ள தகவலே இது. இப்படி நாம் ஒருவர் வாழும் பகுதியை அறிய, அல்லது நான்காம் வீட்டோன் (ஆரூட ராசியிலிருந்து) அமரும் ராசியால் குலதெய்வம் இருக்கும் இடத்தை அறிவதற்கும் இந்த பாடல் மிக பயனள்ளதாகத் தெரிகிறது. தற்போது மேற்கண்ட விதிகளில் எல்லாம் இராசிகளால் இடங்களை துல்லியமாக அறிய மலையாள நூல் ஒன்று தெரிவிக்கும் இராசிகளுக்குரிய இடங்களை பார்ப்போம்.

மேடம் இராசிக்குரிய பகுதிகள் 
மேடம் இராசியை சினேந்திர மாலை காடு சார்ந்த பகுதியாக் கூறுகிறது. மலையாளப் பாடலோ கற்களை வெட்டி எடுக்கும் மலையுடன் சோலைகளும், பாம்புகள் வாழும் பகுதி சிறிய வாய்காலுகள் உள்ளபகுதி, ஆடுமேயும்பகுதி, தாதுக்கள் விளையும் பூமி இவையும் கூறப்பட்டுள்ளன. 

இடபம் இராசிக்கு உரிய பகுதிகள் 
விவசாயம் சார்ந்த பூமி பூனூல் அணிந்த சத்திரிய குலத்தவர்களின் அதிகாரத்தில் உள்ள பகுதி நிதி இருக்கும் பூமி, மாடுகள் அதிகமாக வாழும்பகுதி, மலைசரிவு என்பவையாகும்.

மிதுனராசிக்கு  
இரண்டு நபர்களுக்கு உரியபகுதி வியபாரிகளுக்குரிய பூமியும், பூமியில் அக்னி மூலை என்னும் தென்கிழக்கில் முக்கால் வட்டம் போன்ற அமைப்பு, வாயுமூலை என்னும் வடகிழக்கில் நீர் நிலை யுத்தபூமி, விளையாட்டும் மற்றும் கலவிக்குரிய தேசம், படுக்கை அறை தென்பகுதி மற்றும் கிழக்கில் வனம் அதனுடன் செல்வதற்கான பாதை கல்வி சாலை இவையும் சிரேந்திர மாலை நூலோ ஊர் எனத் தெரிவிக்கின்றது.
கர்கடகம், 
துயரங்கள் தீரத பூமி, தெய்வ ஆலயம், தடாகம், பெண்கள் அதிகமாக வாழும் பகுதி பிராணர்களுக்குரிய பூமி, பல்விதமாக பணவிரயங்களை தரும் பூமி, வடமேற்கில் ராஜதானி என்னும் அரசு மாளிகையும், தென்கிழக்கில் மலையும் காடும், சாய்வான பகுதியும் என கூறப்பட்டுள்ளது. சினேந்திர மாலை ஆசிரியர் வாய்கால் எனக்கூறுகிறார். பாய்ந்து ஒடும் ஆறு மற்றும் சாதகபாரிச்சாதம் கடல் எனத் தெரிவிக்கிறது ஊர்களை சிந்திக்கும் போது தடாகத்திற்கு அல்லது பாய்ந்தோடும் நதிக்கு கடலுக்கு அருகில் ஊரை குறிகாட்டும.; 

சிங்கம்: 
காடுகள் குன்றுகள், உயர்ந்த விவசாய பூமி, நாற்காலி மேச்சல் நிலமும், கிழக்கில் செல்வதற்கான வழி அல்லது சாலை மேற்கு நீர் ஒடை எனவும், குகை பொன்ற பகுதி என சாதகபாரிச்சாதமும் தெரிவிக்கிறது.;

கன்னி: 
பெண் பெயரில் அமைந்த உர் இடம், பெண்களுக்குரிய பகுதி, வடமேற்கு கிழக்கே பெரியகாடு நீர்பாயும் ஒடை வடமேற்கில் பிரமணர்களின், ஆதிக்கத்தில் உள்ள பூமி எனவும் அறியவேண்டும். சினேந்திர மாலை ஒடும் நீர் உடைய பகுதி எனத் தெரிவிக்கிறது. ஓடம் செல்லபாற்கும் பகுதியாக அமைந்த ஊர் எனவும் கூறலாம். பசும்புல் நிறைந்தபகுதி என்பது சாதக பாரிச்சாதம்

துலாம்: 
சாலை அல்லது பாதை, சந்தை கடைவீதி, அருகில் வனம் அரசு கட்டிடமும் அமைந்த பகுதி வடகிழக்கில் ஆலயம்.

விருட்சிகம்:
சூத்தர சாதியினர் வாழும் பகுதி, புற்றுகள், கல் கட்டைகள் குற்றிசெடிகள் பள்ளங்கள் நீர், சிறுகாடு, பூதங்கள் பிரேதங்கள் வாழும்பூமியும், தீயால் எரிந்தபகுதி, எனவும் வால்மீகம் என்னும் புற்றும், தடாகமும் எனவும் பெயர் விருட்சிக இராசிக்குரிய இடங்களை சோதிட நுற்;கள் தெரிவிக்கின்றன.

தனுசு: 
இராஜ அதிகார கட்டிடங்கள் படை பதுங்கும் பகுதி, யுத்தபூமி, பூங்கா கோட்டை, தென்பகுதி மற்றும் கிழக்கில் நீரோடை, வடபகுதியில் சண்டானர்களின் வாசம் உள்ள பகுதி எனவும் சினேந்திர மாலை தோட்டம் என்னும் பூங்காவையும் தனுசு இராசி குறிகாட்டு வதாக தெரிவிக்கிறது.

மகரம்: 
வழக்குகள் சுகமற்றபூமி, எதிரிகளால் தொல்லை நிறைந்த பகுதி தெற்கு மற்றும் கிழக்கில் காடு பசுக்கள் வாழ் ஏற்ற பூமியுமாகும் பாழ்காடு என்னம் புதைமணல் பகுதி சதுப்பு நிர பகுதி பொன்றவையாகும். நதி தோன்றுமிடம் கடலுடன் ஆறு சேரும் பகுதியும் 

மகரம்: 
இராசிக்குரிய பகுதியாக நதி ஏரி, நீர் நிறைந்த பகுதிகளை சாதகபாரிச்சாத ஆசிரியர் தெரிவிக்கிறார்;.

கும்பம்: 
பானை பாத்திரங்கள் உருவாக்கும் பகுதி செங்கல் சூளை, இவை என சாதக பாரிச்சாத ஆசிரியர் கருத்து சமமான பகுதி, நதிமுகம், மக்கள் வாழும் பகுதியும் என மற்றொரு நூலும் சினேந்திர மாலை ஏரி எனவும் கூறுகிறது.

மீனம்: 
சோலை, பொய்கை அருவி, கடல் சார்ந்த பகுதி, (கடல் என சினேந்திர மாலை இங்கே முன் நாம் கற்றுக் கொண்டதின் படி பனிரெண்டாம் வீட்டோன் இருக்கும் ராசி, லக்கின வீட்டோன் இருக்கும் ராசி, லக்கின வீட்டோனின் பனிரெண்டாம் வீட்டோன் இருக்ககும் ராசி, லக்கின வீட்டோனின் பனிரெண்டில் இருக்கும் ராசியால் ஒருவர் வாழும் தேசத்தைக் கூற வேண்டும்.

ஒருவர் வெளிநாட்டில் செல்வதற்கு லக்கினமானது சர ராசியாக இருக்க லக்கினமானது சர கிரகங்களால் பார்க்கப்பட்டால் சாதகர் வாழ்வின் வளங்கள் வெளிநாட்டில் எனக்கூறலாம். மேலும் ஸ்திர ராசிகளான லக்கினங்கள் ஸ்திர கிரகங்களால் பார்க்கப்பட்டால் சாதகர் வளங்களை உள்ளுரில் பெற்று வாழ்வார் எனக்கூறலாம். உபயராசி லக்கினம் உபயகிரகங்களால் பாக்கப்பட்டால் வெளி நாட்டிலும், உள்நாட்டிலும் வாழ்வு வளம் பெற்று வாழ்வர். கிரு;ணீய பிரச்சனை  சாஸ்திரம் கீழ்வருமாறு கூறுகிறது. லக்கினமானது சர ராசி லக்கினமாக சரச நவாம்சத்தில் திரேக்காணம் சர ராசியாகவும் அமைய பட்சி திரேக்காணமாக அமைய பயணத்தை குறித்தச் பிரச்சன சிந்தனை எனக் கூறவேண்டுமாம். இந்த சோதிட விதியை சாதகத்தில் நாம் பொருத்திப் பார்த்தோம் என்றால் ஒருகிரகம் சர ராசியில் இருந்து அல்லது பட்சி திரேக்கானத்தில் இருக்க இரண்டாம் வீட்டை பார்க்கின்றது எனில் அங்ஙனம் பார்க்கும் கிரகம் சுபக்கிரகம் என்றால் அதன் தசை, புத்தியில் வெளி நாட்டிலிருந்து பண வருவாயும்,  பாவக்கிரகம் வலுவற்றகிரகம் என்றால் வெளிநாட்டு தொடர்புகளால் பண விரயமும், மாணவர் ஜாதகம் எனில் அந்த கிரக தசை புத்திகளில் கல்விக்காக வெளிநாடு செல்லுதல் என்னும் யோகமும் எற்படும். இவ்வண்ணமே சர ராசி நவாம்சகம் பட்சிதிரேக் காணங்களில் இருக்க கிரகங்களின் தசை புத்திகளில் வெளியூர் வெளிநாடு பயணங்கள் ஏற்படும் எனக்கூறலாம். இவ்வண்ணமே மற்று பாவங்களையும் அவற்றின் வெளிநாட்டு வெளியூர் பயணங்கள் வாழ்வுகளை உணர்ந்து கொள்ள முடியும். 



வணக்கம் 

  

No comments:

Post a Comment