Saturday, December 3, 2016

உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 05.12.2016


உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 05.12.2016


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


கேள்வி எனக்கு குழந்தை பாக்கியம் தள்ளி போகிறது பரிகாரம் கூறவும்
                                                                                                                               ஆறுமுகம்,  அருப்புகோட்டை

பதில் ஜென்ம லக்கினத்திற்கு 5ம் இடம் புத்திர ஸ்தானமாகும். 5ம் பாவம்பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தை பாக்கியம் ஏற்பட தடை உண்டாகும். 5ம்பாவம் புதன் வீடான மிதுனம்கன்னியாகவோசனியின் வீடான மகரம்,கும்ப மாகவோ இருந்து அதில் சனிமாந்தி போன்ற கிரகங்கள்அமையப்பெற்றுபுத்திர காரகன் குருவும் பலவீனமாக இருந்தால் தத்துபுத்திரயோகம் அதாவது பிறருடைய குழந்தையைத் தத்தெடுத்துவளர்க்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
                துலா லக்கினம் புனர்பூச நட்சத்திரம் மிதுன ராசியில் பிறந்தஉங்களுக்கு 5ம் அதிபதி அலிகிரகமான சனியாகிகேது சாரம் பெற்று,பகை வீடான சிம்மத்தில் அமைந்து உள்ளதால் குழந்தை பாக்கியம்தடைப்படுகிறது. 5ம் அதிபதி சனியாக இருப்பவர்களுக்கு தத்து பிள்ளைஅமைகிறது என்றாலும் உங்கள் ஜாதகத்தில் புத்திர காரகன் குரு உச்சம்பெற்று உள்ளதால் குழந்தை பாக்கியம் உண்டாக சிறிதளவு வாய்ப்புஉண்டுசனிக்கு பரிகாரம் செய்வதுகுல தெய்வ வழிபாடு மேற்கொள்வதுநல்லது.

 கேள்வி என் மகன் மட்டைபந்து விளையாட்டில் இந்திய வீரராக வாய்ப்புஉள்ளதா
மோகன் சென்னை

பதில்                 ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவத்தைக் கொண்டுவிளையாட்டைப் பற்றி அறிய முடியும்பொதுவாக ஒருவர் ஜாதகத்தில்5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருப்பதுகேந்திரதிரிகோணங்களிலோ,நட்பு வீட்டிலோ அமைவது சிறப்பு. 5ம் பாவம் பலம் பெறுவது மட்டுமின்றி3ம் பாவமும் பலம் பெற்றிருந்தால் விடா முயற்சியுடன் எதிலும்செயல்படக்கூடிய ஆற்றலைத் உண்டாகும். 3, 12 பாவங்களும் சிறப்பாகஅமையப் பெற்றால் கைப்பந்துகல்பந்துமட்டைப் பந்து போன்றவற்றில்சாதிக்க முடியும்.

                மிதுன லக்கினம்ஆயில்ய நட்சத்திரம்கடக ராசியில் பிறந்தஉங்கள் மகன் ஜாதகத்தில் 5ம் அதிபதி சுக்கிரன் வக்ரம் பெற்று உள்ளதால்விளையாட்டு போட்டியில் அடைய வேண்டிய இலக்கை அடையஇடையூறுகள் உண்டாகும்குரு பார்வை 3ம் வீட்டிற்கும்சுக்கிரனுக்கும்இருப்பது சிறப்புசுக்கிரன் செவ்வாய் சாரம் பெற்றிருப்பதும்,  செவ்வாய்ஆட்சி பெற்று 5ம் வீட்டை பார்ப்பதும் நல்ல அமைப்பு என்பதாலும்,தற்போது ஜாதகருக்கு சுக்கிர திசை நடப்பதாலும் எதிலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.


 கேள்வி எனக்கு வேலை எப்போது கிடைக்கும்
கண்ணன் சென்னை

பதில் ஜென்ம லக்கிணத்திற்கு 10ம் அதிபதி ஆட்சி உச்சம்பெற்றிருந்தாலும், 10ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில்அமையப் பெற்று இருந்தாலும் சிறப்பான ஜீவனம் செய்துசம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும் என்றாலும் ஒருவருக்குநடக்கக்கூடிய திசையானது 3வது திசையாக இருந்தால் எவ்வளவு தான்திறமை வாய்ந்தவராக இருந்தாலும்கடினமாக உழைத்தாலும்தகுதிக்குகுறைவான உத்தியோக அமைப்பே உண்டாகும்அவ்வளவாகமுன்னேற்றத்தை அடைய முடியாது.
கடக லக்கினம்திருவோண நட்சத்திரம்மகர ராசியில் பிறந்தஉங்களுக்கு 10ல் செவ்வாய் ஆட்சி பெற்று அமைந்து திக் பலத்துடன்இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும்சூரியன் லக்கினத்திலேயேகுரு சாரம் பெற்று அமைந்து வர்கோத்தமமும் பெற்று இருப்பதால் நல்லநிர்வாக திறமையுடன் செயல்பட்டு பெரிய பதவி வகிக்கும் யோகம்உண்டுதற்போது உங்களுக்கு ராகு திசையில் கேது புக்தி 18.10.2017 முடியநடைபெற உள்ளதுஅடுத்ததும் தசாநாதனான ராகுவுக்கு 8ல்அமைந்துள்ள சுக்கிர புக்திசூரிய புக்தி நடைபெற இருப்பது சுமாரானஅமைப்பு ஆகும்அதிலும் தங்களுக்கு தற்போது 3வது திசையாக ராகுதிசை நடை பெறுவதால் கிடைக்கும் வேலையை பயன்படுத்தி கொள்வதுநல்லது. 2024ல் வரும் குரு திசை காலங்களில் தான் நிரந்தரமானஉத்தியோகமும் கௌரவமான பதவிகளும் கிடைக்கும்

கேள்வி எனக்கு தகுதியான வேலை எப்போது கிடைக்கும்
கண்ணன் சென்னை

பதில்                  கடக லக்கினம்சதய நட்சத்திரம்கும்ப ராசியில்பிறந்துள்ள உங்களுக்கு 10ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதுசிறப்பு என்பதால் நல்ல நிர்வாக திறமைமற்றவர்களை வழி நடத்தும்யோகம் உண்டு என்றாலும் பொதுவாக ஒருவர் ஜாதகத்தில்லக்கினத்திற்கு 8ல் அமைந்த கிரகத்தின் திசை அல்லது புக்திநடைபெற்றாலும்திசை நாதனுக்கு 6,8ல் அமைந்த புக்தி நடைபெற்றாலும்வாழ்வில் முன்னேற்ற தடைவேலையில் பிரச்சனை உண்டாகும்.   
உங்களுக்கு புதனின் திசையில் லக்கினத்திற்கு 8ல் பகை பெற்றுஅமைந்துள்ள சூரியனின் புக்தி கடந்த 24.10.2016 முடிய நடைபெற்றது.தற்போதும் லக்கினத்திற்கு 8ல் அமைந்துள்ள சந்திரனின் புக்தி 24.03.2018முடிய நடைபெற உள்ளதுஇதுவும் சாதகமான அமைப்பு என்ற கூறமுடியாது என்பதால் கிடைக்கும் வேலையை பயன்படுத்தி கொள்வதுநல்லதுமார்ச் 2018 முதல் செவ்வாய் புக்தி தொடங்கும் போதுவேலையில் நல்ல நிலையை அடைவீர்கள்.


கேள்வி எனக்கு அரசு உத்தியோகம் எப்போது கிடைக்கும்
சங்கர சுப்பிரமணி தென்காசி

பதில்நவகிரகங்களில் அரசாங்க உத்தியோகத்திற்கு காரகனாகவிளங்கக்கூடிய சூரியன் 10ம் அதிபதியாக இருந்தாலோ, 10ம் வீட்டில்அமைந்து குருபார்வை பெற்றாலோஅரசு மற்றும் அரசு சார்ந்ததுறைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும்ஒருவரின் ஜாதகத்தில் சூரியன்சந்திரன்செவ்வாய்குரு போன்றகிரகங்களின் ஆதிக்கம் 10 வீட்டிற்கு இருக்குமேயானால் அரசு வழியில்அனுகூலம் உண்டாகும்.
                கடக லக்கினம்உத்திர நட்சத்திரம்கன்னி ராசியல் பிறந்துள்ளஉங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதி செவ்வாய் 8ல் இருந்தாலும் குரு சாரம்பெற்று இருப்பதும், 10ல் சூரியன் உச்சம் பெற்றுதிக்பலத்துடன்அமைந்திருப்பதும் அற்புதமான அமைப்பு ஆகும்.  குரு 7ம் பார்வையாகசெவ்வாயையும், 9ம் பார்வையாக 10ல் உள்ள சூரியனையும் பார்ப்பதால்கண்டிப்பாக உங்களுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும்என்றாலும்தற்போது கேது சாரம் பெற்ற ராகு திசை நடப்பதால் சற்று தடைதாமதங்களை சந்திக்க நேரிந்தாலும் விடா முயற்சியுடன் செயல்பட்டால்அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்எதிர்காலத்தில் குரு திசைவரும் போது உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.     


கேள்வி           எனக்கு வேலையில் நல்ல நிலை எப்போது கிடைக்கும்
சங்கர் திருச்சி

பதில் பொதுவாக ஒருவருக்கு 3,6,8,12ல் மறைந்திருக்கும் கிரகம்பாதகஸ்தானத்தில் இருக்கும் கிரகம்அல்லது பாதகாதிபதியான கிரகம்போன்றவற்றின் திசை அல்லது புக்தி நடைபெற்றால் வாழ்வில் நல்லநிலையை அடைய தடை தாமதம் உண்டாகும்.
                துலா லக்கினம்உத்திரட்டாதி நட்சத்திரம்மீன ராசியில்பிறந்துள்ள உங்களுக்கு தற்போது பாதகாதிபதியான 11ம் அதிபதியின்திசை நடைபெறுகிறதுசூரியன் பாதகாதிபதி என்றாலும் லக்கினதிரிகோனத்தில் அமைந்திருப்பதால் சில தடைகளுக்கு பின்முன்னேற்றத்தை அடைவீர்கள்அதிலும் குறிப்பாக தற்போது சூரியதிசையில் சூரியனுக்கு 6ல் உள்ள சந்திர புக்தி நடை பெறுகிறதுஇதுசாதகமான அமைப்பு இல்லைஎன்பதால் செய்யும் பணியில் விட்டுகொடுத்து நடப்பதுசிந்தித்து செயல்படுவது உத்தமம்அடுத்து மே 2017ல்தொடங்கவிருக்கும் செவ்வாய் புக்தி காலங்களில் உத்தியோக ரீதியாகஉயர்வுகளைப் பெறுவீர்கள்




கேள்வி           எனக்கு வங்கி பணிக்கு பல முறை முயற்சித்தும்இடையூறு எற்பட்டு கொண்டு இருக்கிறது எப்போது கிடைக்கும்
பிரசன வெங்கடேசன்  மொகனுர் நாமகல்.

பதில் நவகிரகங்களில் தன காரகன் குரு வலுவாக இருந்துகுருவின்ராசியான தனுசுமீன லக்கினராசியாக கொண்டு பிறந்தவர்களுக்கும்,ஜீவன ஸ்தானமான 10ல் குருபுதனின் அதிக்கம் பலமாகஇருப்பவர்களுக்கும்வலு பெற்று அமைந்த குருவின்  திசையோகுருசாரம் பெற்ற கிரகத்தின் திசையோ நடைபெற்றால் வங்கி பணிபணநடமாட்டம் கொண்ட இடங்களில் பணி புரியும் யோகம் உண்டாகும்.
                மேஷ லக்கினம் உத்திராட நட்சத்திரம் தனுசு ராசியில்பிறந்துள்ள உங்களுக்கு 10ம் அதிபதி சனியாகி 9ம் வீட்டில் வக்ர கதியில்இருப்பதால் நிரந்தர பணி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும்தற்போதுசனியின் வீடான (பாதக ஸ்தானத்தில்) 11ம் வீட்டில் அமைந்து உள்ளராகுவின் திசை நடப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்றாலும் தனக்காரகன் குருவின் புக்தி நடைபெறுவதால்வங்கியில் தற்காலிக பணி கிடைக்கும்தனுசு ராசியில் பிறந்துள்ளஉங்களுக்கு 10ம் அதிபதி சனிகுரு வீட்டில் அமைந்து குரு பார்வைபெறுவதால் வங்கி பணி சில தடைகளுக்கு பின்பு கிடைக்க வாய்ப்புஉண்டு என்பதால் சற்று விடாமல் முயற்சி செய்வது உத்தமம்

No comments:

Post a Comment