இந்த வார ஜோதிடம்
இதழின் இலவச கேள்வி பதில் 21.11.2016
இந்த வார ஜோதிடம் (புதிய வார இதழ்)
சந்தா விவரங்களுக்கு அணுகவும்
contact us : 044- 43993014, 8939882466
Mail id: nakkheeranmagazineweb@gmai l.com, nakkheeransantha@gmail.com
ஆசிரியர்: Dr Murugu Balamurugan PhD
சந்தா விவரங்களுக்கு அணுகவும்
contact us : 044- 43993014, 8939882466
Mail id: nakkheeranmagazineweb@gmai
ஆசிரியர்: Dr Murugu Balamurugan PhD
கேள்வி இப்போது குடியிருக்கும் வீடு இடியும் நிலையில் உள்ளது, புதுவீடு கட்டுவது எப்போது.
சசி குமார், கரூர்
பதில் பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீட்டை கொண்டு சொந்த வீடுயோகத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும். பூராட நட்சத்திரம், தனுசுராசி, விருச்சிக லக்கினத்தில் பிறந்துள்ள தங்களுக்கு 4ம் அதிபதி சனிஉச்சம் பெற்று அமைந்துள்ளார். 4ம் அதிபதி சனியாக இருப்பதால் பழையகட்டிடங்கள், பழைய வீடுகள், கட்டிய வீட்டை வாங்கி பழுது பார்த்துஉபயோகிக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். தாங்கள் புதிதாக வீடுகட்டினாலும் அதில் சிறிதளவாவது பழைய பொருட்களைபயன்படுத்துவது நல்லது. 20.11.2016ல் செவ்வாய் திசை தொடங்கும்.செவ்வாய் திசை குரு புக்தி 2018 ஏப்ரல் முதல் நடைபெறும்.இக்காலங்களில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற் கொள்ளலாம்.
கேள்வி நான் வெளிநாடு சென்று மேற்கல்வி கற்க முடியுமா. கார்த்திக்ஸ்ரீனிவாசன், திருச்சி.
பதில் பொதுவாக ஒருவரது உயர் கல்வியானது சிறப்பாக அமைய 5ம்பாவம் பலமாக இருக்க வேண்டும். 6,9,12ம் அதிபதிகளின் தசாபுக்தி,அல்லது 6,9,12,ம் பாவங்களில் அமைந்துள்ள கிரகங்களின் தசாபுக்திநடைபெற்றால் வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புஅமையும். சிம்ம ராசி, மக நட்சத்திரம், கும்ப லக்னத்தில் பிறந்துள்ளதங்கள் ஜாதகத்தில் 5ம் அதிபதி கல்விகாரகன் புதனாகி சுய சாரம் பெற்று6ல் அமைந்திருப்பதால் (ஆயில்ய நட்சத்திரத்தில்) வெளிநாடு சென்றுகல்வி கற்கும் யோகம் உண்டு. தற்போது சூரிய திசையில் வக்ரம்பெற்றுள்ள சனியின் புக்தி நடைபெறுகிறது. அடுத்து 6ல் உள்ள புதன் புக்தி15.08.2017 முதல் நடைபெறும். இக் காலங்களில் வெளிநாடு சென்று கல்விகற்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
கேள்வி நான் சினிமாவில் எப்பொழுது பிரபலமாவேன்-. ரவி சந்திரன்கடலூர்.
பதில் பொதுவாக ஒருவருக்கு கலை துறையில் ஈடுபாடு உண்டாக கலைகாரகன் சுக்கிரன் பலமாக இருக்க வேண்டும். மீன ராசி, உத்திரட்டாதிநட்சத்திரம், சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதிகலைகாரகன் சுக்கிரனாகி ஆட்சி பெற்றிருப்பதால் கலை துறையில் நல்லஈடுபாடு கொடுக்கும். தற்போது 12ம் அதிபதி சந்திரன் 8ல் அமைந்து திசைநடைபெறுகிறது. 8ல் உள்ள கிரகத்தின் திசை என்பதால் வாழ்வில் எதிலும்எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். சந்திரனுக்குகேந்திரத்தில் குரு அமைந்து தற்போது குரு புக்தி நடைபெறுவது நல்லஅமைப்பு என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதுஉத்தமம். 2019ல் புதன் புக்தி வரும் போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.
கேள்வி எனக்கு அரசு வேலை எப்போது அமையும். ராஜா, திருநெல்வேலி.
பதில் பொதுவாக அரசு உத்தியோகத்திற்கு காரர்களான சூரியனும்,செவ்வாயும் 10ல் பலமாக இருந்தால் கண்டிப்பாக அரசு உத்தியோகம்கிட்டும். ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம், கடக லக்னத்தில் பிறந்துள்ளதங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதி செவ்வாயாகி உச்சம் பெற்று சூரியனின்நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். சூரியன் ராகு சாரம் பெற்றிருப்பதால்நேரிடையாக அரசு துறைகள் இல்லாமல் அரசு உதவி பெறும் துறைகளில்பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். மாநகராட்சி, நகராட்சி,மின்சாரதுறை, போன்ற துறைகளில் பணிக்கான முயற்சிகளைசெய்யலாம்.
கேள்வி என்னுடைய கடன் பிரச்சனைகள் எப்போது தீரும்.செங்குட்டுவன் சென்னை.
பதில் பொதுவாக 6ம் இடம் கடன்களை பற்றி குறிப்பதாகும். 6ம்அதிபதியின் தசா புக்தி காலங்களிலோ அல்லது கடன்களுக்கு காரகனானசனி பகை பெற்று அமைந்து சனி திசை, ஏழரைசனி, அஷ்டம சனிபோன்றவை நடைபெறும் காலங்களிலோ கடன்கள் உண்டாவதற்கானவாய்ப்புகள் அதிகம். துலா ராசி, சித்திரை நட்சத்திரம், மேஷ லக்னத்தில்பிறந்துள்ள உங்களுக்கு கடன்களுக்கு காரகனான சனி சூரியனின் வீடானசிம்மத்தில் அமைந்து தற்போது சனி திசையில் 6ல் அமைந்துள்ள புதனின்புக்தியும் நடைபெறுவதால் மறைமுக கடன்கள், எதிர்ப்புகள் யாவும்உண்டாகும். வயதில் மூத்தவர்களிடமும் கருத்து வேறுபாடுகளைகொடுக்கும். வரும் ஜனவரி 26ம் தேதி 2017ல் அதிசாரமாக சனி 3ம்வீட்டிற்கு மாறுதலாவதால் ஏழரை சனியின் பாதிப்புகள் குறைந்துகடன்களும் படிப்படியாக குறையும்.
கேள்வி எனது தம்பிக்கு திருமணம் எப்போது அமையும்.
சத்தியவதி சிவ, ஈரோடு.
பதில் பொதுவாக திருமண சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு களத்திரபாவமானது பலமாக இருப்பது அவசியம். குறிப்பாக 7ம் அதிபதியின்திசை, புக்தியோ களத்திர காரகன் சுக்கிரன் சம்மந்தப்பட்ட கிரகங்களின்தசா புக்தியோ நடைபெற்றால் திருமணம் விரைவில் கைகூடும். மிதுனராசி, திருவாதிரை நட்சத்திரம், மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள்தம்பிக்கு 7ம் அதிபதி சுக்கிரன் 10ல் தன் நட்பு கிரக வீட்டில்அமைந்திருப்பது நல்ல அமைப்பாகும். தற்போது தங்கள் தம்பிக்கு சனிதிசையில் கேது சாரம் பெற்ற ராகுவின் புக்தி 04.11.2016 வரைநடைபெறுகிறது. அடுத்து சுக்கிரன் சாரம் பெற்ற குருவின் புக்திதொடங்கும். அதனால் இந்த ஆண்டின் இறுதியில் நல்லது நடப்பதற்கானவாய்ப்புகள் உண்டாகும். நல்ல வாழ்க்கை அமையும்.
கேள்வி சொந்த தொழில் செய்யும் வாய்ப்பு உள்ளதா. ஹரி ஹரன்,கம்பம்,
பதில் பொதுவாக 10ம் இடத்தை கொண்டு தொழில் உத்தியோக வாய்ப்புபற்றி அறியலாம். 10ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று பலமாக கேந்திரதிரிகோணங்களில் அமைவது, கேந்திர திரிகோணங்களில் உள்ளகிரகங்களின் தசாபுக்தி நடைபெறுவது கோன்ற காலங்களில் சொந்ததொழில் யோகம் அமையும். கும்பராசி, சதய நட்சத்திரம், கும்பலக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 10ம் அதிபதி செவ்வாய் 8ல் அமைந்துஉள்ளார். தற்போது 12ம் அதிபதி சனி 8ல் அமைந்து சனி திசைநடைபெறுகிறது. இதனால் தாங்கள் சொந்த தொழில் செய்வது என்றால்தனித்து செய்யாமல் யாரையாவது கூட்டாக சேர்த்து தொழில் செய்வதுஉத்தமம். கால புருஷப்படி சனி 6ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுசம்மந்தபட்ட தொழில்கள், ஏற்றுமதி இறக்குமதி தொடர்புடையவைபோன்றவற்றை செய்யலாம்.
கேள்வி எனக்கு திருமணம் எப்போது கை கூடும். பாலாஜி, பவானி.
பதில் கும்பராசி, சதய நட்சத்திரம், கும்ப லக்னத்தில் பிறந்துள்ளஉங்களுக்கு 7ம் அதிபதி சூரியன் கேந்திர ஸ்தானமான 4ல்அமைந்துள்ளார். களத்திர காரகன் சுக்கிரன் ஆட்சி பெற்று பலமாகஅமைந்திருப்பதால் திருமணத்தின் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம்,மற்றும் யோகத்தை அடைய முடியும் என்றாலும் லக்ன, ராசிக்கு 1,7ல்பாவகிரகங்கள் அமைந்திருப்பது நல்லதல்ல. தற்போது லக்னத்தில்அமைந்துள்ள ராகுவின் திசையில் ராகு புக்தி நடைபெறுவதால்திருமணம் நடைபெறுவதில் தாமதநிலை உண்டாகிறது. 18.5.2018ல்சுயபுக்தி முடிவடைந்து குரு புக்தி தொடங்கும் போது திருமணம்கைகூடும்.
கேள்வி எனக்கு மணவாழ்க்கை எப்பொழுது அமையும். வைஜயந்தி,வந்தவாசி.
பதில் தங்கள் ஜாதகத்தில் 7ம் அதிபதி புதன் லாப ஸ்தானமான 11ல்களத்திரகாரகன் சுக்கிரனின் சேர்க்கையுடன் தனது நட்பு வீடான சனியின்வீட்டில் உள்ளார். 7ம் வீட்டையும், 7ம் அதிபதியையும், களத்திர காரகன்சுக்கிரனையும் குரு பார்வை செய்வதால் மண வாழ்க்கையானது மிகவும்மகிழ்ச்சி கரமாக அமையும். கடந்த 2015 ஜனவரி வரை ராசிக்கு 2ல் உள்ளராகுவின் புக்தி நடைபெற்றது. அதனால் திருமணம் நடைபெறதாமதநிலை ஏற்பட்டது. தற்போது குரு திசை தொடங்கி உள்ளதால் இந்தஆண்டு இறுதிக்குள் திருமணம் கை கூடும். நல்ல வாழ்க்கை துணைஅமையும்.
No comments:
Post a Comment