கேள்வி எனக்கு எப்போது திருமணம் நடக்கும் எப்படி இருக்கும்.
கண்ணன் சென்னை.
பதில் தனுசு லக்கினம், விசாக நட்சத்திரம், விருச்சிக ராசியில்பிறந்துள்ள உங்களுக்கு 7ம் அதிபதி புதன் வக்ர கதியில் அமைந்துஇருப்பதால் திருமணம் தடை உண்டாகி உள்ளது, சிம்மத்தில் சூரியன்வீட்டில் சனி இருப்பதும் சூரியன் ராகு சேர்க்கை பெற்றதும் பிதுர் வழிதோஷம் ஆகும், குல தெய்வ வழிபாடு மேற் கொள்வது, சிவ வழிபாடுசெய்வது நல்லது,
புதன் வக்ர கதியில் உள்ளதால் உறவில்லாத அன்னிய பெண், எதாவது குறை உள்ள பெண் மனைவியாக அமைய வாய்ப்பு உண்டு, தற்போது விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு 11ல் குரு இருப்பதால்முயற்சித்தால் 2017ல் தொடக்கத்தில் திருமண நடைபெற வாய்ப்புஉள்ளது.
கேள்வி நான் சி.ஏ படிப்பு படித்து கொண்டு இருக்கிறேன் எப்போதுமுடிப்பேன்
சந்தோஷ் கோவை.
பதில் ஜென்ம லக்னத்திற்கு 4,5ஆம் பாவங்கள்வலுவாக அமையப்பெற்று, 4,5ஆம் வீடுகளில் அல்லது 4,5க்குஅதிபதிகளுடன் புதனும் பலமாக அமைந்திருந்து குரு பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் கணிதம், வணிகத்தில் ஈடுபாடு இருக்கும். மிதுனம், கன்னி வீடுகள் ஜென்ம லக்கினமாகவோ, 4,10ஆம் வீடுகளாகவோஅமையப் பெற்றாலும் வணிகவியல் படிப்புகளான பி.காம்., எம்.காம்., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ போன்ற கல்வி கற்க்கும் வாய்ப்பு அமையப்பெறுகின்றது.
மகர லக்கினம், விசாக நட்சத்திரம், துலா ராசியில் பிறந்தஉங்களுக்கு ஜாதகத்தில் 4ம் அதிபதி செவ்வாய் 7ல் நீசம் பெற்று பூசநட்சத்திரத்தில் அமைந்து சனி சாரம் பெற்று உள்ளது, வணிகவியல்படிப்புக்கு காரகன் புதன் வக்ர கதியில் உள்ளார், பொதுவாக புதன் வக்ரம்பெற்றால் படித்த படிப்பை விட்டு விட்டு வேறு துறைக்கு செல்லுதல்அல்லது அடைய வேண்டிய இலக்கை அடைய இடையூறுகள்உண்டாகும்.
கேள்வி எனக்கு எப்போது அரசாங்கத்தில் வேலை கிடைக்கும்.
தேவேந்திரன். புதுக்கோட்டை.
பதில்& நவகிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்றகிரகங்களின் ஆதிக்கம் 10 வீட்டிற்கு இருந்தால் அரசு வழியில் அனுகூலம்உண்டாகும்.
சிம்ம லக்கினம், விசாக நட்சத்திரம், விருச்சிக ராசியல்பிறந்துள்ள உங்களுக்கு அரசு உத்தியோகத்திற்கு காரகனான சூரியன் குருசாரம் பெற்று 11ல் உள்ளதும், செவ்வாய் ஆட்சி பெற்றதும் அரசு வழியில்அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் உங்கள் ஜாதகத்தில் 10ம்அதிபதி சுக்கிரன் ஜல ராசியான கடகத்தில் 12ம் வீட்டில் அமைந்துஉள்ளதால் நேரடி அரசு உத்தியோகம் இல்லாமல் பிறந்த ஊரை விடவெளியூரில் பணி புரியும் அமைப்பு அல்லது பன்நாட்டு நிறுவனத்தில்பணிபுரியும் அமைப்பு அல்லது நடப்பது புதன் திசை என்பதால் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் அமைப்பு உண்டு.
கேள்வி எப்போது திருமணம் நடக்கும் எப்படி.
இளம்பாரதி இராஜபாளையம்
பதில்& கடக லக்கினம், புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசியில்பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் 7ம் அதிபதி சனி உச்சம் பெற்று உள்ளதால்திருமணத்திற்கு பிறகு மனைவி மூலம் வாழ்வில் முன்னேற்றம் வளர்ச்சிஉண்டாகும். உங்களுக்கு புதன் திசையில் கேது சாரம் பெற்ற சூரிய புத்தி30.03.3017 வரை நடைபெறுவதால் திருமணம் நடைபெற தடங்கல்உண்டாகிறது. அடுத்து குரு நட்சத்திரத்தில் உள்ள சந்திர புத்தி 30.03.2017 முதல் நடைபெற உள்ளதால் 2017 பிற்பாதியில் கண்டிப்பாக திருமணம்நடைபெறும்.
7ம் அதிபதி சனி ராகு நட்சத்திரமான சுவாதியில் உள்ளதாலும் 5ம்அதிபதி செவ்வாய் சனி நடசத்திரமான அனுஷத்தில் இருப்பதாலும், தந்தை காரகன் சூரியன் கேது நட்சத்திரத்தில் மகத்தில் இருப்பதாலும், பாரம்பரத்தை கூறிக்கும் கிரகமான குரு வக்ர கதியில் கேதுநட்சத்திரத்தில் மூலத்தில் இருப்பதாலும் உறவில் இல்லாமல் அண்ணியபெண் உங்களின் விருப்பத்தின் பெயரில் திருமணம் நடைபெற வாய்ப்புஉள்ளது. திருமணத்தில் தந்தை வழி உறவினர்கள் பகை ஏற்பட வாய்ப்புஉள்ளது.
கேள்வி என் மகனுக்கு திருமணம் தாமதம் ஆகிறது எப்போது நடக்கும் .
இராமலிங்கம் கோவை
பதில்& தனுசு லக்கினம், மக நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்துள்ளஉங்கள் மகன் ஜாதகத்தில் 7ம் அதிபதி புதன் 8ல் மறைந்து இருப்பதாலும்சுக்கிரன் நீசம் பெற்றதாலும் திருமணம் தாமதம் ஆகிறது, அது மட்டும்இல்லாமல் தற்போது கேது நடசத்திரத்தில் உள்ள சந்திர திசைநடைபெறுவதால் இடையூறு உண்டாகிறது, தற்போது சந்திர திசையில்லக்கினாதிபதி குரு புத்தி 30.12.2017 முடிய நடப்பதாலும், ராசிக்கு 2ல்கோட்சார ரீதியாக குரு சஞசரிப்பதாலும் திருமண முயற்சிமேற்கொண்டால் 2017 தொடக்கத்தில் நல்ல வரன் அமையும் யோகம்உள்ளது, கேது நட்சத்திரத்தில் பிறந்து உள்ளதால் விநாயகர் வழிபாடுமேற்கொள்வது சிறப்பு.
கேள்வி நான் செய்து வரும் டைலரிங் வேலையை தொடர்ந்துசெய்யலாமா. அல்லது வேறு தொழில் செய்யலாமா.
குருநாதன் கரூர்,
பதில்
மிதுன லக்கினம், பூர நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்துள்ளஉங்களுக்கு 10ம் அதிபதி குரு, 9ம் வீட்டில் ராகுவின் நட்சத்திரமானசதயத்தில் அமைந்து வர்கோத்தமும் பெற்றிருப்பது சிறப்பான அமைப்புஎன்றாலும் வேலையாட்களுக்கு காரகனான சனி வக்ர கதியில்இருப்பதால் வேலையாட்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள்.
பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 3,6,9,12ல் அமைந்த கிரகத்தின்தசா நடைபெற்றால் வெளியூர், பயணங்கள் தொடர்புடைய துறையில்அனுகூலமான பலனை அடைய முடியும். உங்களுக்கு தற்போது ஜென்மலக்கினத்திற்கு 6ல் அமைந்துள்ள ராகுவின் திசை 27.10.2022 வரைநடைபெற இருப்பதாலும் 10ம் அதிபதி குரு 9ம் வீட்டில் உள்ளதாலும்டைலரிங் துறையை விட வெளியூர், பயணங்கள், சரக்கு வாகனங்கள்தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தைஅடைய முடியும். அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது உத்தமம்.
கேள்வி எனக்கு திருமணம் நடைபெற தாமதம் ஆகிறது. எப்போதுநடக்கும்.
கனேசன் கும்பகோணம்
பதில்&
பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் சந்திரன், சனி இனைந்துஇருப்பது புனர்பூ தோஷம் ஆகும். இதனால் திருமண சுபகாரியங்கள்நடைபெற தடங்கல், தாமதநிலை ஏற்படும்.
தனுசு லக்கினம், சித்திரை நட்சத்திரம், கன்னி ராசியில்பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் 7ம் அதிபதி புதன் 10ம் வீட்டில் ஆட்சிஉச்சம் பெற்றிருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் திருமணத்திற்குபின் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடையும் யோகம் உண்டு. என்றாலும் சந்திரன், சனி இணைந்து 7ம் அதிபதி புதனுடன் சேர்க்கைபெற்றிருப்பதால் திருமணம் நடைபெறுவதில் தாமத நிலை உண்டாகிறது.
இந்த புனர்பூ தோஷம் உண்டாகி இருப்பதால் தாய் வழியில்உள்ள குல தெய்வத்தை வழிபாடு செய்வது நல்லது. பெண் தெய்வங்களைவழிபாடு செய்வது மூலமும் உங்களுக்கு திருமண தடங்கல்கள் விலகிநல்லது நடக்கும். 7ம் அதிபதி புதன் வலுவாக உள்ளதால் நல்ல படித்தபண்புள்ள பெண் வாழ்க்கை துணையாக அமையும். தாங்கள் இடத்தில்இருந்து வடக்கு திசையில் வரன் அமையும் வாய்ப்பு உண்டாகும்.
கேள்வி என் மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும்.
வேதாரத்தினம். பட்டுக்கோட்டை
பதில்& துலா லக்கினம், பூராடம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்துள்ளதங்கள் மகள் ஜாதகத்தில் 7ம் அதிபதி செவ்வாய் தன ஸ்தானமான 2ல்ஆட்சி பெற்று இருப்பது அற்புதமான அமைப்பாகும். சுக்கிரன், சனியும்ஆட்சி பெற்று 3 கிரகங்கள் பலமாக இருப்பதால் வாழ்வில் நல்லமுன்னேற்றத்தை அடையும் யோகம் உண்டு. திருமண வாழ்வும் சிறப்பாகஅமையும்.
பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் லக்கின, ராசிக்கு 2,7ல் பாவகிரகம் அமைந்து அதன் தசா, அல்லது புத்தி நடைபெற்றால் திருமணம்கைகூட தடை ஏற்படும். தங்கள் மகளுக்கு தற்போது செவ்வாய் தசாநடப்பது அற்புதமான அமைப்பு என்றாலும், சந்திரனுக்கு 2ல் அமைந்துள்ளசனியின் புத்தி 23.9.2017 வரை நடைபெறுவதால் திருமணம் கைகூடதடைகள் உண்டாகிறது. இதற்கு அடுத்து சந்திரனுக்கு 7க்கு அதிபதியானபுதனின் புத்தி வரும் போது திருமணம் நடைபெறும். தனுசு ராசியில்பிறந்துள்ள ஜாதகிக்கு கோட்சார ரீதியாக 12.09.2017 முதல் குருவும் 11ல்சஞ்சரிக்க இருப்பதால் எளிதில் திருமணம் கை கூடும்.
No comments:
Post a Comment