Saturday, November 19, 2016

மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும்


மேஷம்(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்)

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனிசென்னை -- 600 026
தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


மேஷ ராசியின் அதிபதி கந்தவேல் முருகனென்று போற்றப்படும் தமிழ் கடவுள் அம்சமாகிய செவ்வாயாகும். கால புருஷனின் தலையைக் குறிக்கும் இந்த ராசியானது முதல் சரராசியாகும். அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் மேஷ ராசிகாரர்களாக கருதப்படுவார்கள். இது ராஷோ குணம் கொண்ட புருஷ ராசியாகும். மேஷ ராசி ஒரு பாவராசியாகும். மேஷ ராசிக்கு மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை நட்பாகவும்,கடகம் விருச்சிகம், மீனம் பகையாகவும், ரிஷபம், கன்னி, மகரம் சமமாகவும் அமைகின்றன. 

உடலமைப்பு,

 மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் நிமிர்ந்த நடையும், கணிந்த பார்வையும் அழகிய நீண்ட புருவங்களும், அழகான பல்வரிசையும் கொண்டவர்கள். அடர்த்தியான தலை முடியிருக்கும். காதுகள்  எடுப்பாக இருக்கும். பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். தீர்காயுளும், தெய்வ பக்தியும், இரக்க குணமும் அதிகமிருக்கும். 

குண அமைப்பு,

 மேஷ ராசிக்கார்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தங்களுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடுவார்கள். அதிலும் இவர்கள் காரியவாதிகள் என்பதால் வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து  தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவார்கள். வீண் பழி சொற்களுக்கும் செவிசாய்க்க மாட்டார்கள். சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றலும் இவர்களுக்கு  உண்டு. வெகுளியாகவும், கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள்.  தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு  எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவுவார்கள். 
                      தன்னுடைய கௌரவத்திற்கும், பெருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புகளை ற்றுக் கொள்வார்கள். எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் விடுவார்கள். கவலைகலை உடனுக்குடன் மறந்துவிடும் ஆற்றலும் நல்ல திறமையும் இவர்களிடத்தில் காணப்பட்டாலும், இவர்களது அகங்கார குணமும் சுயேச்சான சுபாவமும் இவரை நேசிப்பவரை கூட வெறுக்கும் படி செய்து விடும். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் இவருக்கு உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள். 

மணவாழ்க்கை,

 மேஷராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன், மனைவி அனுசரித்து வாழ்வதென்பது இயலாத காரியமாகும் என்றாலும் குடும்பத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். குடும்பத்திற்காக எவ்வளவுதான் உழைத்தாலும் நல்லது செய்தாலும் இவரால் நல்ல பெயரை எடுக்க முடியாது.  மனைவிக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ செலவுகள் ஏற்படுவது மட்டுமின்றி மனைவி வழி உறவுகளாலும் பிரச்சினைகள் எற்படும். இதனால் அடிக்கடி விரக்தி மனோபாவத்திற்கு தள்ளப்படுவார்கள். 

பொருளாதாரநிலை, 

மேஷராசியில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்ற பண வசதிகள் ஏற்பட்டாலும் சேமிக்கும் அளவிற்கு வருவாய் இருக்காது. தான தர்மம் செய்யும் குணம் கொண்டவர் என்பதால் பிறர் இவர்களை எளிதில் ஏமாற்றி காரியத்தை சாதித்துக் கொண்டு நன்றியை மறந்து தூற்றுவார்கள். கடன் வாங்கி பிறருக்கு உதவி செய்வதால் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் அவமானப் படுவார்கள். கடன் வாங்கியவர்களும் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றுவார்கள். செலவுகள் இவர்களுக்கு அதிகம் என்பதால் வரவு செலவுகளை இவர்களால் திட்டமிட முடியாது. வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று சுகத்தோடு வாழ வேண்டுமென்று இவர்கள் நினைத்தாலும் அது முடியாமலே போகும். எதிர்பாராத இன்பங்கள் தேடி வந்தாலும் இவரது கவனக்குறைவினால் அதை நழுவ விட்டு விடுவார்கள். பூர்வீக சொத்துக்களாலும் இவர்களுக்கு அனுகூலம் இருக்காது. எது எப்படி இருந்தாலும் வாழ்வில் ஏற்படக்கூடிய இன்ப, துன்பங்கள் சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சாதுர்யத்துடனும் திறமையுடனும் எதையும் சமாளிப்பார்கள். பண விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் வளம் பெருகும் என்பதில் ஐயமில்லை. 

புத்திரபாக்கியம்,

 இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ், கௌரவம் உயரப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாகவும், தாய், தந்தையை ஆதரிப்பவர்களாகவும், பெரியோர்களின் சொற்படி கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாகவும் இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமில்லை என்றாலும் புத்திரர்களால் அனுகூலமுண்டு என்று சொல்லலாம். 

தொழில்,

 மேஷ ராசியில் பிறந்தவர்கள் சளைக்காமலும், சுயநலம், பிரதி பலன் எதிர்பாராமலும்,  பரந்த நோக்கத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் ஊதியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் எடுக்கும் காரியங்களில்  கண்ணும் கருத்துமாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டு ªவ்ற்றிகளை பெறுவார்கள். உழைப்பையும், கடமையையும் பெரிதாக கருதுவதால் பிறர் உதவியின்றி சுயபலத்துடன் பாடுபட்டு வெற்றி கொடியை நாட்டுவார்கள். ஜீவன ஸ்தானாதிபதி சனி பலம் பெற்றிருப்பதால், வீடு, மனை வாங்கிய விற்கும் தொழில், என்ஜினியர்கள் மொசைக்கல், நிலக்கரி, பெட்ரோல், மண்ணெண்ணெய், பலவித எண்ணெய் தொழில், விவசாயம் செய்தல், பல வேலையாட்களை வைத்து வேலைவாங்கும் யோகம் போன்றவை உண்டாகும். 

உண்ண வேண்டிய உணவுவகைகள்,

 மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீரை வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பரங்கி காய், வெள்ளரிக்காய், கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். 

அதிர்ஷ்டம் அளிப்பை 

எண்  1,2,3,9,10,11,12
நிறம்  ஆழ்சிவப்பு
கிழமை  செவ்வாய்
கல்  பவளம் 
திசை  தெற்கு 
தெய்வம்  முருகன்



No comments:

Post a Comment