Friday, December 30, 2016

வார ராசிப்பலன் ஜனவரி 1 முதல் 7 வரை 2017

வார ராசிப்பலன் ஜனவரி 1 முதல் 7 வரை 2017

(ஜனவாி 1ம் தேதி முதல் தினமும் 
வலைதளத்தில் தினப்பலன்)

வார ராசிப்பலன்  ஜனவரி  1 முதல் 7 வரை   2017
மார்கழி 17 முதல் 23 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





இந்த வார பஞ்சாங்கம்

01.01.2017, மார்கழி 17, ஞாயிறுக்கிழமைதிரிதியை திதி பகல் 03.33வரை பின்பு வளர்பிறை சதுர்த்திதிருவோணம் நட்சத்திரம்மாலை 04.01 வரை பின்பு அவிட்டம்அமிர்தயோகம் மாலை 04.01வரை பின்பு மரணயோகம்நேத்திரம் & 0, ஜீவன் & 1/2, சுப நாள்சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.


02.01.2017, மார்கழி 18, திங்கட்கிழமைசதுர்த்தி திதி மதியம் 03.51வரை பின்பு வளர்பிறை பஞ்சமிஅவிட்டம் நட்சத்திரம் மாலை04.51 வரை பின்பு சதயம்நாள் முழுவதும் சித்தயோகம்நேத்திரம்& 0, ஜீவன் & 1/2 , மாத சதுர்த்தி விநாயக வழிபாடு நல்லதுசுபநாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.


03.01.2017, மார்கழி 19, செவ்வாய்கிழமைபஞ்சமி திதி மதியம் 03.42வரை பின்பு வளர்பிறை சஷ்டிசதயம் நட்சத்திரம் மாலை 05.17வரை பின்பு பூரட்டாதிநாள் முழுவதும் மரணயோகம்,  நேத்திரம்&  1, ஜீவன் & 1/2, முருக வழிபாடு நல்லதுசுபமுயற்சிகளைதவிர்க்கவும்.

04.01.2017, மார்கழி 20, புதன்கிழமைசஷ்டி திதி மாலை 03.06 வரைபின்பு வளர்பிறை சப்தமிபூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.15 வரைபின்பு உத்திரட்டாதிஅமிர்தயோகம்   மாலை 05.15 வரை பின்புசித்தயோகம்நேத்திரம் & 1 , ஜீவன் & 1/2 , சஷ்டி விரதம் முருகவழிபாடு நல்லது.        

05.01.2017, மார்கழி 21, வியாழக்கிழமை,       சப்தமி திதி பகல் 02.01வரை பின்பு வளர்பிறை அஷ்டமிஉத்திரட்டாதி நட்சத்திரம்மாலை 04.45 வரை பின்பு ரேவதிநாள் முழுவதும் சித்தயோகம்,நேத்திரம் &  1, ஜீவன் & 1/2 , சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும்ஏற்ற நாள்.


06.01.2017, மார்கழி 22, வெள்ளிக்கிழமைஅஷ்டமி திதி பகல் 12.25வரை பின்பு வளர்பிறை நவமிரேவதி நட்சத்திரம் பகல் 03.45வரை பின்பு அஸ்வினிசித்த யோகம் பகல் 03.45 வரை பின்பு அமிர்தயோகம்நேத்திரம் &  1, ஜீவன் & 1/2 , அம்மன் வழிபாடுநல்லதுசுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

07.01.2017, மார்கழி 23, சனிக்கிழமைநவமி திதி காலை 10.22 வரைபின்பு  தசமிஅஸ்வினி நட்சத்திரம் மதியம் 02.18 வரை  பின்புபரணி,      நாள் முழுவதும் சித்தயோகம்நேத்திரம் &  2, ஜீவன் & 1/2 , சனி பகவான் வழிபாடு நல்லது.







கேது  செவ்
சுக்கி
               
திருக்கணித கிரக நிலை




சந்தி  
ராகு
புதன் (வ)
சூரிய
சனி 

               
குரு 


கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்  30.12.2016 இரவு 07.38 மணி முதல் 02.01.2017 அதிகாலை 04.25 மணிவரை.
கும்பம்  02.01.2017 அதிகாலை 04.25 மணி முதல் 04.01.2017 பகல் 11.15 மணிவரை.
மீனம்          04.01.2017 பகல் 11.15 மணி முதல் 06.01.2017 மதியம் 03.45 மணிவரை.
மேஷம்   06.01.2017 மதியம் 03.45 மணி முதல் 08.01.2017 மாலை 05.58 மணிவரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

01.01.2017 மார்கழி 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியைதிதிதிருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம்வளர்பிறை

02.01.2017 மார்கழி 18 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்திதிதி அவிட்டநட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் தனுசுஇலக்கினம்வளர்பிறை

05.01.2017 மார்கழி 21 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமிதிதி உத்திரட்டாதிநட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மகரஇலக்கினம்வளர்பிறை


மேஷம்   அசுவனிபரணிகிருத்திகைம் பாதம்
தைரியமும் அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எந்த விதபிரச்சனைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன், 11ல் செவ்வாய்சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும்ஆடம்பர செலவுகளை குறைப்பதால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதைதவிர்க்கலாம்எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவதுவெற்றியினைப் பெற்று விடுவீர்கள்கணவன் மனைவியிடையே சிறுசிறுகருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாதுஉற்றார்உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்குஅனுகூலப்பலன் கிட்டும்.  தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில்நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாதுபுதிய ஒப்பந்தங்களில்கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள்கொடுக்கல் வாங்கலில்சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும்தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிப்பதோடு உடல்ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் உண்டாகும்அசையும் அசையாசொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்ற கவனம் தேவைஉத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் கெடுபிடிகள் ஏற்பட்டாலும்உடனிருப்பவரின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள்அரசுவழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தேடி வரும்மாணவர்கள்தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது கல்வியில் கவனம்செலுத்துவது உத்தமம்இந்த வாரம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதுநல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     1,7.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணிமிருகசீரிஷம் 1,2ம்பாதங்கள்
பார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழிகளாக இருந்தாலும் யார் வம்புக்குவந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசிநேயர்களேஇந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் குரு, 10ல் செவ்வாய்சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 8ல் சூரியன்சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றிமருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்குடும்பத்தில் உள்ளவர்களிடம்விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும்சிறப்பாகவே இருக்கும்எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்வெற்றியினைப் பெற்று விடுவீர்கள்பணம் பல வழிகளில் தேடி வரும்குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும்வீடு மனை போன்றவற்றைவாங்கும் முயற்சிகளை தற்போது மேற் கொள்ளலாம்திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்நல்லவரன்களும் தேடி வரும்செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பானமுன்னேற்றம் உண்டாகும்மறைமுக எதிர்ப்புகள் மறையும்பல பெரியமனிதர்களின் உதவிகளும் கிடைக்கும்கொடுக்கல் வாங்கலில் பெரியமுதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்உத்தியோகஸ்தர்கள்பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின்பாராட்டுதல்களை பெறுவீர்கள்மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறமுடியும்பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால்அனைவரின் ஆதரவுகளையம் பெறுவீர்கள்சிவபொருமானை வழிபாடுசெய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     2,3,4,5,6.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள்திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம்பாதங்கள்
தன்னுடைய  ரசிக்கும்படியான பேச்சாற்றலால் மற்றவர்களின்நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களேஇந்தவாரம் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சனி, 9ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெற்று விடுவீர்கள்உடல்ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாதுஎன்றாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிரமமும்இருக்காதுகணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள்உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லதுதிருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளிவைப்பது உத்தமம்.  பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவேஇருக்கும்எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும்அசையும் அசையாசொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும்பயணங்களால் தேவையற்றஅலைச்சல்கள் உண்டாகும்கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும்கொடுத்த கடன்களைவசூலிப்பதில் சற்று பிரச்சனைகளை சந்திப்பீர்கள்தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும்உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்தொழிலாளர்களின்ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும்மாணவர்களுக்குகல்வியில் சற்று மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் முழு மூச்சுடன்முயன்று படிப்பது உத்தமம்தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     4,5,6,7.
சந்திராஷ்டமம்      30.12.2016 இரவு 07.38 மணி முதல் 02.01.2017 அதிகாலை 04.25 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம்பூசம்ஆயில்யம்
கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும் பிறருக்குஎந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்டகடக ராசி நேயர்களேஇந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன்சஞ்சரிப்பது ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்றாலும் 8ல் செவ்வாய்சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துகொண்டால் மட்டுமே தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதைதவிர்க்க முடியும்பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும்எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்திருமணசுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்குடும்பத்தில்சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாதுஉற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும்தொழில்வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும்எதிர்பார்த்த லாபத்தை பெறஎதிர் நீச்சல் போட வேண்டி வரும்உத்தியோகஸ்தர்களுக்கு பணியில்நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும்தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லதுதேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும்பணம் கொடுக்கல்வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமேஎதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்இந்த வாரம் முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     1,7.
சந்திராஷ்டமம்                      02.01.2017 அதிகாலை 04.25 மணி முதல்04.01.2017 பகல் 11.15 மணி வரை.

சிம்மம் மகம்பூரம்உத்திரம்ம் பாதம்
நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும்தன்னை போலவே பிறரும்நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசிநேயர்களேஇந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் சூரியன், 7ல் செவ்வாய்சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2ல் குரு சஞ்சரிப்பதால்குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன்மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமானசுபகாரியங்கள் கை கூடும்பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும்கடன்களும் படிப்படியாக குறையும்புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்சிலருக்கு சொந்த வீடு வாகனம்போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள்நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்கொடுக்கல் வாங்கலில்  பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கலாம்கொடுத்தகடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாதுவெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்தொழில் வியாபாரம்செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும்பயணங்களால்அனுகூலம் உண்டாகும்உத்தியோகஸ்தர்கள் பணியில்உயர்வடைவார்கள்வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரியவிரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்மாணவர்கள் கல்வியில் சிறந்துவிளங்கி பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்இந்தவாரம்சிவபெருமானை வழிபாடுவது செய்வது நற்பலனை தரும்
வெற்றிதரும் நாட்கள்     1,2,3.
சந்திராஷ்டமம்                      04.01.2017 பகல் 11.15 மணி முதல் 06.01.2017 மதியம் 03.45 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள்அஸ்தம்சித்திரை 1,2ம் பாதங்கள்
தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும்இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களேஇந்த வாரம்ஜென்ம ராசிக்கு 3ல் சனி 6ல் செவ்வாய்கேது சஞ்சரிப்பது சாதகமானஅமைப்பு என்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண்விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்உடல் ஆரோக்கியத்தில்சோர்வுவயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் பெரியஅளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாதுகணவன் மனைவியிடையேஅடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில்நிதானத்தை கடைபிடிப்பதுகுடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லதுசிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறுவீண் செலவுகள் ஏற்படும்பணம் கொடுக்கல் வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லதுஉத்தியோகஸ்தர்கள் தங்கள்பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உடன் பணிபுரிபவர்களைஅனுசரித்து செல்வது உத்தமம்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குபோட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்துஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள்கிடைக்க வேண்டிய லாபமும்கிடைக்கும்மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடியசூழ்நிலைகள் உண்டாவதால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும்சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     2,3,4,5.
சந்திராஷ்டமம்                      -06.01.2017 மதியம் 03.45 மணி முதல்08.01.2017 மாலை 05.58 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதிவிசாகம்1,2,3ம் பாதங்கள்
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல்பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களேஜென்ம ராசிக்கு 3ல்சூரியன், 5ல் சுக்கிரன், 11ல் ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால்வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும்பல பெரிய மனிதர்களின் நட்புகிட்டும்குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் கருத்துவேறுபாடுகள்தோன்றினாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதநிலைஏற்படும்.  பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராதவீண் செலவுகளும் ஏற்படும்உடல் ஆரோக்கியத்தில் அசதி சோர்வுபோன்றவை உண்டாவதால் அன்றாட பணிகளில் மந்த நிலையிலேயேசெயல்படுவீர்கள்கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைஈடுபடுத்தாமல் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவதுநல்லதுதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள்கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும்எடுக்கும் முயற்சிகள்அனைத்திலும் வெற்றிகள் கிட்டும்அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன்உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்கூட்டாளிகளிடம் சற்றுவிட்டு கொடுத்து நடப்பது உத்தமம்புதிய வேலை தேடுபவர்கள் தற்போதுகிடைப்பதை பயன் படுத்தி கொள்வது உத்தமம்மாணவர்களுக்கு பெரியமனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கப் பெறும்தட்சிணாமூர்த்தியை வழிபடுவதுசனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     4,5,6,7

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம்அனுஷம்கேட்டை
மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில்வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களேஉங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், 4ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது பேச்சில் நிதானத்தைகடைபிடிப்பது நல்லதுலாப ஸ்தானமான 11ல் குரு சஞ்சாரம் செய்வதால்பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள்பூர்த்தியாகும்உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வதுநல்லதுநேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும்தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துகொள்ளலாம்குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறுசிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும்திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனை அடைவீர்கள்எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடியஆற்றல் உண்டாகும்பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைஈடுபடுத்தி எதிர் பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும்தொழில்வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும்அனுசரித்து செல்வது சிறப்புஉத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்படசெயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்விளையாட்டுபோட்டிகளில் கவனம் தேவைதினமும் விநாயகரை வழிபாடு செய்வதுநல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     1,6,7.

தனுசு  மூலம்பூராடம்உத்திராடம் 1ம் பாதம்
யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இயலாத காரியமாககருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களேஜென்ம ராசியில் சூரியன்சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 3ல் செவ்வாய்,  கேதுசஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும்வெற்றிகளைப் பெறுவீர்கள்குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள்உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதுஅனைவரிடமும் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம்உடல்ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவசெலவுகளை குறைத்து கொள்ள முடியும்தொழில் வியாபாரத்தில் சற்றுமந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது என்றாலும்நிறைய போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற வேண்டியிருக்கும்பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைதவிர்க்கவும்பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும்ஆடம்பர செலவுகளைக்குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் சமாளிக்கலாம்எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லதுஉத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன்செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம்மாணவர்கள்கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைபெற முடியும்சிவபொருமானை வழிபாடு செய்வது சனிக்குரியபரிகாரங்களை தொடர்ந்து மேற்கொள்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     2,3,4.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள்திருவோணம்அவிட்டம்1,2ம்பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும்நகைச்சுவை உணர்வுடனும் கள்ளகபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசிநேயர்களேஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய் 12ல் சூரியன் சஞ்சாரம்  செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 9ல் குரு 11ல் சனி சஞ்சாரம்செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம்உண்டாகும்பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள்அனைத்தும் பூர்த்தியாகும்உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்எடுத்துக் கொள்வது நல்லதுகுடும்பத்தில் சுபிட்சமானநிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும்உண்டாகும்உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்சில நேரங்களில் அவர்களே தேவையற்ற பிரச்சனைகளையும்ஏற்படுத்துவார்கள்பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும்தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்தலாபங்களும் கிட்டும்தொழிலாளர்களும் கூட்டாளிகளும் அனுகூலமாகசெயல்படுவார்கள்பயணங்களால் சாதகப்பலன் அமையும்உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின்பாராட்டுதல்கனைப் பெற முடியும்எதிர்பார்க்கும் இட மாற்றமும்கிடைக்கும்மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்லமதிப்பெண்களை பெறுவார்கள்அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள்தாமதப்படும்தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     1,4,5,6.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம்பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தனக்கு பிடித்தவர்களிடம் அன்புடன் நெருங்கி பழகும் பண்பும்பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத குணமும் கொண்ட கும்ப ராசிநேயர்களேஇந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சுக்கிரன், 11ல் சூரியன்புதன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்துக்கொள்வது நல்லதுகணவன் மனைவியிடையே தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகிகுடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும்எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும்திருமணசுபகாரியங்கள் கை கூட சற்று தாமத நிலை ஏற்படும்உற்றார்உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம்அனுகூலப்பலன்களைப் பெற முடியும்உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்தஉயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும்உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.  பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளைபிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லதுதொழில்வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெறமுடியும்வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கபெறும் என்றாலும் தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதுநல்லதுமாணவர்களுக்கு உடல் நிலையில் உண்டாக கூடியபாதிப்புகளால் கல்வியில் சற்ற மந்த நிலை உண்டாகும்முருகப்பெருமானை வழிபாடு செய்யவும்.
வெற்றிதரும் நாட்கள்     2,3,4,7.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம்உத்திரட்டாதிரேவதி
சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடித்து பேசும் போதுவார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்டமீன ராசி நேயர்களேஉங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் குரு, 10ல் சூரியன்சஞ்சாரம் செய்வதால் உடல் நிலை சிறப்பாக அமைந்து அன்றாடபணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும்கணவன்மனைவியிடையே ஒற்றுமை நிலவும்பணவரவுகள் தாராளமாகஇருக்கும்எதிர்பாராத உதவிகளும் தேடி வரும்செலவுகளும் கட்டுக்குள்இருப்பதால் சேமிக்க முடியும்பொன் பொருள் சேரும்திருமணம்போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்உற்றார் உறவினர்கள் அனுகூலமாக அமைவார்கள்பூர்வீகசொத்துக்களால் லாபம் கிட்டும்புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடியசம்பவங்கள் நடைபெறும்செய்யும் தொழில் வியாபாரத்தில்முன்னேற்றமான நிலை இருக்கும்பயணங்களால் புதிய வாய்ப்புகள்கிட்டும்கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்திலாபம் காண முடியும்கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும்ஏற்படாதுஉத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும்வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின்விருப்பமும் நிறைவேறுதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்மாணவர்கள்நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும்பெறுவார்கள்அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     1,4,5,6.

No comments:

Post a Comment