வார ராசிப்பலன் நவம்பர் 6 முதல் 12 வரை 2016
நாளை 6.11.2016 முதல் விற்பனையில்
இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
வார ராசிப்பலன் நவம்பர் 6 முதல் 12 வரை 2016 / ஐப்பசி 21முதல் 27 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
கேது
|
கிரக மாற்றம்
7.11.2016 தனுசு சுக்கிரன்
9.11.2016 விருச்சிக புதன்
| ||
செவ்
|
ராகு
| ||
சனி சுக்கி
|
சூரிய புதன்
|
குரு
| |
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம் - 06.11.2016 காலை 08.00 மணி முதல் 08.11.2016 மாலை 04.32மணி வரை.
கும்பம் 08.11.2016 மாலை 04.32 மணி முதல் 10.11.2016 இரவு 09.16மணி வரை.
மீனம் 10.11.2016 இரவு 09.16 மணி முதல் 12.11.2016 இரவு10.29 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
06.11.2016 ஐப்பசி 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டிசிதிதி உத்திராடநட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள்விருட்சிக இலக்கினம். வளர்பிறை
07.11.2016 ஐப்பசி 22 ஆம் தேதி திங்கட்கிழமை சப்தமி திதி திருவோணநட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள்விருட்சிக இலக்கினம். வளர்பிறை
11.11.2016 ஐப்பசி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசிதிதிஉத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லேசரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம்ஜென்ம ராசிக்கு 10ல் செவ்வாய், 11ல் கேது சஞ்சாரம் செய்வது சாதகமானஅமைப்பு என்றாலும் 7ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல்ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவதுநல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாகத்தானிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறுதடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையேதேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது.கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம்வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நல்லமுன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும்மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும்கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரம் எதிலும் சற்று எதிலும்சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சிவபெருமானைவழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 6,7,8,9,10.
ரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம்பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசிநேயர்களே ஜென்ம ராசிக்கு 5ல் குரு, 6ல் சூரியன், சஞ்சாரம் செய்வதால்தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும்.புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன்பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும்உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமானநிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உங்களுக்கு 7ல் சனிசஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சற்று நிதானித்துசெயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள்தோன்றும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில்வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குபணியில் நிம்மதியான நிலையிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களைசெய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 9,10,11,12
மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம்பாதங்கள்
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமானவேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டமிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 5ல் புதன், 6ல் சனிசஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்தால் அனுகூலமானபலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகள் உண்டாவதால்பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாககுறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின்ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும்ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம்அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப்பின்கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமானஉயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம்கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது.தட்கிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 11,12.
சந்திராஷ்டமம் 06.11.2016 காலை 08.00 மணி முதல் 08.11.2016மாலை 04.32 மணி வரை.
கடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும்முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசிநேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன், 7ல் செவ்வாய் சஞ்சாரம்செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடனிருப்பவர்களைஅனுசரித்து செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண்அலைச்சல்கள் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும்செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரைகுடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதுஉத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில்தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில்பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிலருக்கு அசையும்அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில்வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்கவேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள்பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப்பெற முடியும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 6,7,8.
சந்திராஷ்டமம் 08.11.2016 மாலை 04.32 மணி முதல் 10.11.2016இரவு 09.16 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால்பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களேஜென்ம ராசிக்கு 2ல் குரு, 3ல் சூரியன் சஞ்சரிப்பது அனுகூலங்களைஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும்.குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும்நிவர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால்அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையேஅன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும்.உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில்வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புமகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களும் பணியில்நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலம்உண்டாகும். சனிப்ரீதி, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 6,7,8,9,10
சந்திராஷ்டமம் 10.11.2016 இரவு 09.16 மணி முதல் 12.11.2016இரவு 10.29 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின்சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே ஜென்மராசிக்கு 2ல் புதன், 3ல் சனி, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் இந்த வாரம்நீங்கள் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும் என்றாலும்எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். பேச்சில் சற்றுநிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாகமாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறுஅலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரியகெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும்உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர்வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம்தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியைவழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 9,10,11,12.
துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோடஉதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டுபழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 4ல் செவ்வாய், 12ல் குரு, சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்புஎன்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்துசெயல் பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும்.குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும்ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையாசொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். வீடு வாகனம் வாங்கும்விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலைதேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும்.உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றேஅலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது.சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 11,12.
விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம்தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே ஜென்மராசிக்கு 3ல் செவ்வாய், 11ல் குரு சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்புஎன்பதால் பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். தடைப்பட்டதிருமண சுபகாரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால்அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமிமனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல்ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். கணவன்மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள்ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமானநிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்றுநிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும்தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும்ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப்பெற முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 6,7,8.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களைசிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதைகொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3ல்கேது, 11ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால்எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். பேச்சில் சற்றுநிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற மறைமுகஎதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பதுநல்லது. சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும்பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும்உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர்வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம்தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம்செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம்.சனிபகவானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 9,10.
மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம்பாதங்கள்
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும்அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும்மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 10ல் சூரியன், 11ல் சனி,சுக்கிரன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால்பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும்.குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம்.கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் வியபாரம்நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள்ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள்பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றேதாமத நிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத்தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம்கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தைபெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளைசமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். தினமும்விநாயகரை வழிபடுவது, துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 6,7,8,11,12.
கும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும்குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும்ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 8ல் குரு, 12ல்செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால்குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல்ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள்உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சுமாராகஇருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள்ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள்உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமேஅனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்குமுன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையேஇருக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்குதேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையாசொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில்நிதானம் தேவை. முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 9,10.
மீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும்துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில்அடிமையாகாத மீன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 7ல் குரு, 11ல்செவ்வாய் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லாதேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். சுபகாரியங்கள் கை கூடிமகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றிகிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். 8ல்சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரியமுதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள்தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின்பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால்எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்திலும் அனுகூலமானப்பலனைப் பெற முடியும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 6,7,8,11,12.

No comments:
Post a Comment