Friday, December 30, 2016

திருமணத்தை உறுதிப்படுத்தும் சகுனம்


திருமணத்தை உறுதிப்படுத்தும் சகுனம்
பிரச்ன சோதிட வித்தகர்
அம்சி விவேகானந்தர்

9443808596


                சகுனம் என்னும் நிமித்த சாஸ்திரம் கேலிக்குரியதன்று தெய்வீகக் கலையாம். ஜோதிடத்தின் ஆறு பேரங்கங்களில் ஒன்றே நிமித்த சாஸ்திரமாகும். சாதகம் கோளம் நிமித்தம் பிரச்னம் முகூர்த்தம் கணிதம்என்பதே சாதகத்தின் ஆறு அங்கங்கள். சோதிடத்தில் சம்ஹிதா கிரந்தங்களோ நிமித்தங்களின் பன்முக பயன்களை எடுத்துக் கூறுகின்றன. மணம் கைக் கூடுமோ வர இருக்கும் செய்தி நன்மையானதா, தீமை விளைய இருக்கிறதா என்பவற்றோடு ஏன் புவியில் தோன்றும் பேர முடிவுகள், மன்னர்களின் மரணத்தைக் கூட நிமித்தங்களால் அறிந்துக் கொள்ள முடியும்.
                நிமித்த சாஸ்திரத்தை தெளிவாகக் கற்ற சோதிட பண்டிதர்கள் சாதக் கணிதங்கள் மற்றும் சோதிட விதிளைக் கற்றுக் கொள்ளாமல கூட அற்புதமான பலன்களைக் கூற முடியும் ஏன் சாமான்யனும் நிமித்தம் கற்றுக் கொண்டால் அவன் சோதிட மாமணியாகத் திகழ முடியும்திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது மணமகன் அல்லது திருமணம் வேண்டி காத்திருக்கும் இளம் பெண் சோதிடரிடம் செல்லாமலேயே தமக்கு பார்த்திருக்கும் மணம் கைகூடுமா இல்லையா என்பதை உணர முடியும். இதற்கு சோதிட நூல்கள் கூறும் கருத்துக்களை இங்கே காண்போம்.
                யாத்திரை செல்லும் போது மது பானங்களை காண்பது, பச்சை மாமிசம், பிணம் எரியும் தீ, அட்சதை நெய், வெள்ளைப் பூக்கள், சந்தணம், இரட்டை பிராமணர்கள், விலை மகள், தயிர், தேன், கருமபு, யானை, மங்கல வாத்திய ஒலி, கழுத்தில் கயிறு பூட்டப்பட்ட பசு இவை எதிர் வர நாம் செல்லும் காரியம் வெற்றியில் முடியும் என் பிரச்ன சாஸ்திரம் கூறுகிறது. சங்கு, பூ~ணம், மாலை அணிகலன்கள், நிறைகுடம், பொன், வெள்ளி, வீணை, நண்பர்கள் மேல் நல்ல செய்திகளை காதுகளால் கேட்பது, மனதிற்கு இதமான வார்த்தைகளை கேட்பது, பல வர்ணக் கொடி, இவை எதிர் வரக் காண்பதும் மணதிற்கு மகிழ்ச்சி தரும் காட்சிகள். சங்கு நாதம் வாத்திய கோ~ம், வேத அத்யாயன சப்தம், புண்ணிய வசனங்கள் தெய்வீக ஸ்தோத்திரங்கள், மங்கல வர்த்தைகள், நறுமணம் தவழ்வது இவை யாவும் சுபங்களை கூட்டுவிக்கும் நிமித்தங்களாகும். பொதுவாக நிமித்தங்களைக் குறித்து சுருக்கமாக ஒரு பாடல் உள்ளதுஅதன் பொரள் ஒருச் செயலைக்குறித்து அல்லது வருபவற்றைக் குறித்து நீ அவை சுபமான தா? தீமையானதா? என உணர்ந்து கொள்ள நீங்கள் பெறும் செய்திகள், அவற்றின் நன்மை, தீமைகளுக்குத் தக்க வண்ணம் நீங்கள் எண்ணிய காரியத்தின் முடிவு இருக்கும் என உணர வேண்டும் எனக் கூறுகிறது நிமித்த சாஸ்திரத்தை திருக்குறள் போல் இரு வரிகளுக்கள் அடக்கி விட்ட இந்த செய்தி அற்புதமானதாகும்.
                அடுத்ததாக திருமணம் கூட்டுவிக்கம் நிமித்தங்களாக நூல்களில் கூறப்பட்ட நிமித்தங்களைக் காண்போம் திருமணம் குறித்த பேச்சு எழுந்த போது அல்லது திருமணத்திற்காக பெண் பார்க்கச் செல்லும் போது கீழ்கண்ட நிமித்தங்கள் நிகழும் எனில் மணம் கைகூடும் என உணரவேண்டும்.
1.            எவரைக் குறித்தேனும் அவரின் சிறப்புகளை ஒருவர் எடுத்துக் கூறக் கேட்டோம் என்றால் மணம் கூடும் என உணரலாம் அதற்கு பதிலாக சலவை செய்த புடவை அல்லது புதுப் புடவையைக் காண நேரிட்டாலும் திருமணம் கைகூடும்
2.            இரட்டை புதுப்புடவைகளை காண நேர்வதும், சந்தனம் மஞ்சள் இவை ஒன்றாக அரைத்த வைக்கப்பட்டுளதை பார்த்தாலும்
3.            இருக் கன்னிப் பெண்களை ஒன்றாக காண்பது அல்லது இரு இளைஞர்களை ஒன்றாக காண்பது மணம் கூட்டுவிக்கும் நிமித்தங்கள்
4.            அரைத்த களபம் காண நேரிடினும், அல்லது விசித்திரமானபட்டு புடைவைகளை காண்பது, பல்வண்ண பூக்கள், அல்லது பல நிறங்களைக் காண்பது மணம் கூட்டுவிப்பதாகும்.
5.            வால் கண்ணாடியை காண நேரிடுவது, அதாவது திருமண பேச்சின் இடையே எவரேனும் வால் கண்ணாடியைக் கொண்டு வருவார் என்றால் திருமணம் நடக்கம் எனக் கூறலாம் அதற்கு பதிலாக தீடீரென ஒருவர் கால் மூட்டுக்களை தொட காண்பதும் திருமணத்தை கூட்டுவிக்கும் எனலாம்.
திருமணத்தைக்குறித்த ஆலோசனை நேரம் அல்லது பெண்பார்க்கச் செல்லும் போது இருவர் ஒருவரோடு ஒருவர் கை கோர்த்தக் கொள்வதை காண நேரிடின் நிச்சயமாக பார்க்கின்ற மணமானது கைகூடும் எனக்கூறலாம் மேலும் மற்று ஒரு நூலின் கூறப்பட்ட நிமித்த விதிகளை இங்கு காண்போம்.
                திருமணத்ததைக் குறித்த ஆலோசனை செய்யும் வேளை கமண்டலத்தை தவிர்த்து மற்று பாத்திரங்களை எவரேனும் விற்பதற்காக கொண்டு வருகின்றார் என்றாலும் வால்கண்ணாடி, தும்பை பூ, வெள்ளில் பொருட்கள், நீராடி தூய்மையுடன் பூனூல் அணித்த ஆணை காண நேரிடினும், கையால் கண்களை தொடுவதை பார்த்தாலும் உடனடியாக மணம் கைகூடுமாம்அதுபோலவே தீய நிமித்தங்களாக கூறப்பட்ட சகுனங்கள் தோன்றினால் நாம் தற்போது நிச்சயம் செய்ய இருக்கும் பெண்ணை, அல்லது ஆணை மணம் முடிப்பது தீமையை தரும் எனவும் உணர வேண்டும் என்னும் தகவலுடன்


பூச நட்சத்திர பரிகாரங்கள்:


27 நட்சத்திரங்களில் எட்டாவதாக வரும் நட்சத்திரம் பூசம் ஆகும்.இது கால புருஷ இராசியான மேஷத்திற்கு நான்காம் இராசியான கடக இராசியில் இடம் பெறும் நட்சத்திரமாகும்.இதன் நட்சத்திராதிபதி சனி,இதன் அதிதேவதை பிருகஸ்பதி என்ற வியாழ பகவான்,இதன் விருட்சம் அரச மரம்.பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை அன்று நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானுக்கு பாலபிஷேகம் செய்து மஞ்சள் ஆடை அணிவித்து மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து வழிபட்டு வருவதன் மூலமும்,அரச மரங்கள் நடுவதன் மூலமும் அரச மரங்களுக்கு நவதானியம் ஊற வைத்த நீரை ஊற்றி வருவதாலும் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று மேன்மை அடையலாம்.
கடக இராசிக்கு பூர்வ புண்ணிய இராசியாக செவ்வாயின் ஆதிக்கம் உள்ள விருச்சிக இராசி வருவதாலும் அங்கு கேது உச்சம் பெறுவதாலும் இவர்கள் தங்கள் பரிகாரங்களை முருகன் கோவில்களில் செய்வது சிறப்பு.
பூச நட்சத்திரத்திற்கு சம்பத்து தாரா நட்சத்திரங்கள் ஆயில்யம்,கேட்டை, ரேவதி ஆகும். இவை இடம் பெறும் இராசிகள் கடக இராசிக்கு 1-5-9 என்ற தர்மத்திரிகோண இராசிகளாக வரும்.எனவே பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்ய நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானுக்கு அல்லது கோவிலில் இருக்கும் நாகர் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து,பட்டு துண்டு அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும்,கோவிலில் விளக்கு ஏற்ற பயன்படும் விளக்குத்திரிகளை உபயம் அளிப்பதன் மூலமும் நல்ல உடல் நலம் மன பலம் ஏற்படும்.
கேட்டை நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வித்து பச்சை பட்டு அணிவித்து முருகனிடம் இருக்கும் வைரவேல் அல்லது வஜ்ர வேலுக்கு சந்தனம் குங்குமம் வைத்து வழிபட்டு வருவதாலும்,ஊரில் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு சிவப்பு ஆடை அணிவித்து சிவப்பு நிற மலர்களால் கட்டிய மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர புத்தி பலம் பெருகும்.பெற்றோர்களுக்கு பிள்ளைகளால் நன்மை இன்பம் ஏற்படும்.குழந்தை வரம் வேண்டுவோருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும் மந்திர சித்தியும் ஏற்படும்.
ரேவதி நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள சனிபவானுக்கு இளநீர் அபிஷேகம் செய்வித்து நீல நிற ஆடை அணிவித்து மல்லிகைப்பூ மாலை சாற்றி இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றி வழிபட்டு வர முன்னோர்கள் வழியில் இருந்த தோஷங்கள் விலகும்.தந்தை வழி உறவுகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கப்பெற்று வாழ்க்கை மேம்படும்.நல்ல குருமார்களின் தொடர்பும் ஆதரவும் கிடைக்கும்.வெளியூர் பயணங்களால் நன்மை,உயர் கல்வியில் மேன்மை சமூகத்தில் புகழ் பாராட்டு பெறுதல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
பூச நட்சத்திரத்திற்கு ஷேமம் என்ற நற்பலன் தரும் நட்சத்திரங்கள் பூரம்,பூராடம்,பரணி ஆகும். இவை இடம் பெறும் இராசிகள் கடக இராசிக்கு 2-6-10.என்ற கர்மத்திரிகோண இராசிகளாக வரும்.எனவே பூசத்தில் பிறந்தவர்கள் பூரம் நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு சிவப்பு நிற பட்டாடை அணிவித்து மல்லிகைப்பூ மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டு வருவதாலும், நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வித்து வெண் பட்டு ஆடை அணிவித்து வெண்தாமரை மாலை அல்லது மல்லிகைப்பூ மாலை சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர பொருளாதாரத் தடை நீங்கி தன வரவு மேம்படும்.குடும்பத்தில் உறவினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் நிலவும்.குடும்பத்தில்  செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
பூராடம் நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நந்தியம் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து நந்தியின் கொம்புகளில்  மல்லிகைப்பூ மாலை சுற்றி வழிபட்டு வந்தாலும் அல்லது அருகில் இருக்கும் பசு மடத்திற்குச் சென்று அங்குள்ள பசுமடத்தை பராமரிக்கும் பணியாளர்களுக்கு இயன்ற பொருளுதவிகள் செய்வதன் மூலமும் நோய் நொடிகள் நீங்கும்.கடன்,எதிரித்தொல்லைகள் வம்பு வழக்குகள் தீரும்.
பரணி நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் அம்மன் கோவில் அல்லது துர்க்கை கோவிலுக்குச் சென்று பால் மற்றும் தயிர் இவற்றால் அபிஷேகம் செய்வித்து அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர செய்தொழில் வியாபாரம்,உத்யோகம் இவற்றில் மேன்மை ஏற்படும்.
பூச நட்சத்திரத்திற்கு எல்லா வகையிலும் நன்மை மேன்மை அளிக்கும் சாதகத்தாரா பலன் தரும் நட்சத்திரங்கள் ஹஸ்தம், திருவோணம்,ரோகிணி ஆகும்.இவை இடம் பெறும் நட்சத்திரங்கள் கடக இராசிக்கு 3-7-11 என்ற காமத்திரிகோண இராசிகளாக வரும்.எனவே பூசத்தில் பிறந்தவர்கள் ஹஸ்தம் நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பிள்ளையாருக்கு பால்,மற்றும் இளநீர் அபிஷேகம் செய்வித்து வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் படைத்து பக்தர்களுக்கு அரிசிப்பொரி உருண்டை தானம் அளிப்பதன் மூலமும்,கோவிலின் இளைய பூசாரிக்கு தாம்பூலம் தட்சிணை கொடுத்து அவரிடம் ஆசி பெறுவதன் மூலமும் திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து அதில் வெற்றி பெறலாம்.வாழ்வில் சுய முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். போட்டி,தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.இளைய சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் நிர்வாகத் திறமை மேம்படும் மதிப்பு மரியாதை கிடைக்கும்.
திருவோண நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளுக்கும் தாயாருக்கும் பாலபிஷேகம் செய்வித்து நீல நிற பட்டாடை அணிவித்து துளசி மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும் கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள்,குங்குமம் மற்றும் தாலிக்கயிறு இவற்றை தானம் செய்வதன் மூலமும் திருமணத்தடைகள் அகலும். தம்பதிகளுக்குள் அன்பும், ஒற்றுமையும்  பெருகும் இல்லற வாழ்வில் இன்பம் சேரும்.
ரோகிணி நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளுக்கு பால்,தயிர், இவற்றால் அபிஷேகம் செய்வித்து வெண்ணிற ஆடை அணிவித்து சந்தன காப்பு சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும்.ஸ்ரீ கிருஷ்ணர் சன்னிதியில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் சாற்றி பால் பாயாசம் படைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு  கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெண்ணெய் தானம் செய்து வருவதன் மூலமும் எண்ணங்கள் யாவும் பலிதமாகும்.எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.மூத்த சகோதர சகோதரிகளால் நன்மை லாபம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெற்று சேமிப்புகள் அதிகரிக்கும்.
பூச நட்சத்திரத்திற்கு நட்பு மற்றும் அதி நட்பு என்ற பலன் கொடுக்கும் மைத்திர தாரா மற்றும் பரம மைத்திர தாரா நட்சத்திரங்கள் ஸ்வாதி,சதயம், திருவாதிரை மற்றும் விசாகம்,பூரட்டாதி, புனர்பூசம் ஆகும்.இவை இடம் பெறும் இராசிகள் கடக இராசிக்கு 4-8-12 என்ற மோட்சத்திரிகோண இராசிகளாக வரும்.எனவே பூசத்தில் பிறந்தவர்கள் ஸ்வாதி நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று கருடாழ்வாருக்கு பால் மற்றும் தேன் இவற்றால் அபிஷேகம் செய்வித்து,சிவப்பு நிற ஜரிகை உள்ள வெண்பட்டாடை அணிவித்து சிவப்பு நிற ரோஜா மற்றும் மல்லிகை மலர்களால் கருடாழ்வாரை அர்ச்சித்து நெய்தீபம் ஏற்றி கருடப்பத்து பாடலைப் படித்து வழிபட்டு வருவதன் மூலமும்
விசாக நட்சத்திர நாளில் முருகன் கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து வெண்பட்டாடை அணிவித்து மல்லிகைப்பூ மாலை சாற்றி மூலவர் சன்னிதியின் வாசலில் இருக்கும் சரவிளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும்
நிலம்,வீடு, வாகனம்,சொத்து இவை தொடர்பான விஷயங்களில் நன்மை மேன்மை ஏற்படும்.தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடும் மேன்மையும் உண்டாகும்.
சதய நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் அம்பாள் கோவிலுக்குச் சென்று அம்பாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அரக்கு நிற பட்டாடை அணிவித்து ரோஜாப்பூ மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கப் பயன்படும் காகித தட்டுகளை உபயம் அளித்து வருவதன் மூலமும்
பூரட்டாதி நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் அம்பாள் கோவிலுக்குச் சென்று அம்பாளுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் சந்தன காப்பு சாற்றி ரோஜாப்பூ மாலை மற்றும் மஞ்சள் ஆடை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும்
நீண்ட நாள் பிணி, துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். எதிர்பாராத விபத்து,கண்டம், நஷ்டம், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
திருவாதிரை நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்திற்கு பால்,தயிர், பன்னீர்,இளநீர்,விபூதி இவற்றால் பிஷேகம் செய்வித்து சாம்பிரானி தூபம் புகைத்து தேங்காயில் நெய்தீபம் ஏற்றி நடராஜர் பத்து பாடல்களைப் படித்து வழிபட்டு வருவதன் மூலமும் கால பைரவர் சன்னிதியில் பைரவருக்கு இளநீர் அபிஷேகம் செய்வித்து செவ்வரளி மாலை சாற்றி குங்கிலிய தூபம் புகைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும்
புனர்பூச நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ராமர் சன்னிதியில் ஸ்ரீராமருக்கும் சீதா பிராட்டிக்கும் பச்சை நிற ஆடை அணிவித்து துளசி மாலை சாற்றி சாம்பிரானி தூபம் புகைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலமும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ பாதுகை எந்திரம் அல்லது ராமர் ஜாதகம் இவற்றை உபயம் அளிப்பதன் மூலமும்
வாழ்வில் வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் குறையும். வெளியூர் வெளி மாநில வெளி நாட்டுத் தொடர்புகள் அல்லது வெளிநாட்டு வேலைகள் மூலம் நன்மை மேன்மை ஏற்படும்.உடல் சோர்வு, தூக்கமின்மை தோஷம் விலகி நல்ல சயன சுகம் கிடைக்கும்.
ஜோதிடர் ஜோதிஷண்முகம்
7/43
தெற்கு தெரு
பறக்கை 629601
9629170821